"ஒருவேளை, numerology யா இருக்குமோ?.. ஏன் இப்பிடி குழப்பிட்டு"... மனதில் பட்டதை போட்டுடைத்த கஸ்தூரி!
ஊர்களின் பெயர்கள் மாற்றம் குறித்து கஸ்தூரி ட்வீட் பதிவிட்டு கேள்வி எழுப்பி உள்ளார்
சென்னை: "ஒரு வேளை, numerology யா இருக்குமோ? ஏன் இப்பிடி குழப்பிட்டு? என்ன லாபம்? டெர்மினஸ், டிரெயின் ஸ்டேஷன் எல்லாத்துலயும் பேர் மாத்த காண்ட்ராக்ட் - எடுக்கறவங்களுக்கும் குடுக்கறவங்களுக்கும் லாபம்" என்று ஊர் பெயர்கள் மாற்றம் அறிவிப்பு குறித்து நடிகை கஸ்தூரி வழக்கம்போல் மனசில் பட்டதை பட்டென போட்டு உடைத்து ட்வீட் போட்டுள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் ஊர்களின் பெயர்களை தமிழ் உச்சரிப்புக்கு ஏற்றவாறு ஆங்கிலத்தில் எழுதுவது பற்றி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கான நடைமுறை சிக்கல் காரணத்தையும் அரசு தெளிவாக தெரிவித்துள்ளது.. இதற்கு பல தரப்பில் இருந்து வரவேற்புகள் குவிந்தாலும், ட்விட்டர்வாசிகள் சிலர் இந்த பெயர் மாற்றத்தில் தவறு உள்ளதாகவும், அவைகளில் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அரசின் இந்த பெயர் மாற்ற அறிவிப்பு குறித்து நடிகையும், சமூக செயற்பாட்டாளருமான கஸ்தூரியும் கருத்து தெரிவித்துள்ளார்.. அடுத்தடுத்து 3 ட்வீட்களை பதிவிட்டுள்ளார். அதில், "ஒரு வேளை, numerology யா இருக்குமோ?,

நான்லாம் இன்னும் மெட்ராஸ் ஊட்டி பம்பாய்-னு தான் இன்னும் சொல்லிக்கிட்டுருக்கேன்... இதுல palavakkam இல்லை, paalavaakkam , coimbatore மாத்தி koyampuththur ஆனா erode மட்டும் erode... இப்பிடி குழப்பி என்ன லாபம்? டெர்மினஸ், டிரெயின் ஸ்டேஷன் எல்லாத்துலயும் பேர் மாத்த காண்ட்ராக்ட் - எடுக்கறவங்களுக்கும் குடுக்கறவங்களுக்கும் லாபம்" என்று பதிவிட்டுள்ளார்.

வழக்கம்போல நக்கல் கலந்து அதே சமயம் மிக முக்கியமான கேள்வியையும் கஸ்தூரி முன் வைத்துள்ளதை இங்கு கவனிக்க வேண்டி உள்ளது. கஸ்தூரியின் இந்த ட்வீட்டுக்கு பலரும் கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.. அதில் ஒருவர் "எங்க பாட்டி கூட அப்படி தான் சொல்லிட்டு இருக்காங்க 😂😂😂" என்று ஸ்மைலிகளுடன் ஒரு கமெண்ட் போட்டார்.

விடுவாரா நம்ம கஸ்தூரி, "சிரிப்பா தம்பி. நீயும் ஒரு நாள் கிழவனாகத்தான் போறே... வயசு எல்லாருக்கும் ஆகும். அதுக்கேத்த அறிவு வளரலேன்னா உன்னை போல கமெண்ட் அடிச்சுகிட்டு அதுக்கு நீயே சிரிச்சுக்கிட்டு இருக்க வேண்டியதுதான். ஆளும் வளரனும் அறிவும் வளரனும்...வாழ்த்துக்கள்" என்று திருப்பி பதில் கமெண்ட் போட்டு அந்நபரை ஆஃப் செய்துவிட்டார். இப்போது கஸ்தூரியின் ட்விட்டர்தான் தெறித்து விழும் கருத்துக்களால் படுசூடாகி வருகிறது!

-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications