மாமன்னன் மேடையிலேயே.. நாஞ்சில் சம்பத்.. அப்படி சொன்னதும்.. மெய்சிலிர்த்து போயிருப்பாரு உதயநிதி
சென்னை: திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதியின் மாமன்னனாக சுடர்விட்டுக் கொண்டிருக்கும் வாலிப எரிமலையே என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து பேசிய நாஞ்சில் சம்பத் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'மாமன்னன்' படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது. இந்த நிகழ்வில் மாரிசெல்வராஜ், உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக கமல்ஹாசனும் கலந்துகொண்டார்.

இந்த விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் முதன்முறையாக நடித்துள்ளேன். இன்னும் சொல்லப்போனால் இது தான் என்னோட கடைசி படம். வடிவேலு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பெரிய குழுவுடன் இந்தப்படம் அமைந்தது மகிழ்ச்சி. மாரி செல்வராஜ் படங்களில் நீங்கள் என்ன எதிர்பார்ப்பீர்களோ அது இந்தப் படத்திலும் அமைந்துள்ளது. மாமன்னன் படத்தை ஜூன் 29-ம் தேதி வெளியிட முடிவு செய்திருக்கிறோம்" என்றார்.
இந்த விழாவில் பேசிய நாஞ்சில் சம்பத், "இளைஞரின் மாமன்னனாக , திருவல்லிக்கேணி சேப்பாக்கம் தொகுதியின் மாமன்னனாக சுடர்விட்டுக் கொண்டிருக்கும் வாலிப எரிமலையே, வானம் அளவு பொழிகின்றன தம்பி உதயநிதி ஸ்டாலின் மாமன்னன் என்ற படத்தில் நாயகனாக வர இருக்கிறார்.

நாடே இந்த படத்தை நிரம்ப எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. வைகை புயல் வடிவேலு நடித்துள்ளார். ஒரே நேரத்தில் இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்று ஆசிய கண்டத்திற்கே பெருமை சேர்த்த ஏஆர் ரகுமான் கூட்டணியில், மாமன்னனாக நடிக்கின்ற தம்பி உதயநிதியின் படம், அவர் இதுவரை நடித்து வந்த படங்களை காட்டிலும், மாமன்னன் வாகை சூடும்.. வரலாறு படைக்கும் என்று நான் ந்ம்புகிறேன்.
ஒரு இசை வெளியிட்டுவிழாவுக்கு இவ்வளவு கூட்டம், அதிலும் ஆரவாரமான கூட்டமாக இங்கே இருக்கிறதென்றால், மாமன்னன் வாகை சூடுவதை, வரலாறு படைக்கப்போவதை இந்த நாடு பார்க்க இருக்கிறது. நானும் பார்க்க இருக்கிறேன். மாமன்னன் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்.












Click it and Unblock the Notifications