40,469 கி.மீ வேகம்.. ‘விமானம்’ சைஸ் சிறுகோள்.. பிசிறு தட்டுனா பூமிக்கு எமன்! நாசா சொன்ன ஷாக் தகவல்!
சென்னை: சுமார் 40,469 கி.மீ வேகத்தில் விமானம் சைஸ் கொண்ட சிறுகோள் ஒன்று பூமிக்கு அருகில் இன்று வருகிறது. இதனால் பூமிக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமா என்பது குறித்து நாசா விஞ்ஞானிகள் விளக்கியுள்ளனர்.
உலகம் முழுவதும் விண்வெளி துறையின் மீதான முதலீடுகள் சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது. ஆனால் ஏன் நாம் விண்வெளி துறையின் மீது அதிக கவனம் செலுத்துகிறோம்? என்று அடிக்கடி பலரும் கேள்வியெழுப்புகின்றனர். நாட்டில் பஞ்சம், பசி, பட்டினி, வறுமை, வேலையின்மை இதெல்லாம் இருக்கும்போது ஏன் விண்வெளி துறைக்கு கோடி கோடியாக அள்ளி கொடுக்கிறோம் என்று கேள்வி எழுந்தது. அதற்கான பதிலை விஞ்ஞானிகள் கூறினர்.

அதாவது, "நாம் இருக்கும் உலகம் ஏராளமான பேரழிவுகளை சந்தித்து வந்திருக்கிறது. இதில் 90 சதவிகிதத்திற்கும் அதிகமான உயிர்கள் அழிந்துவிட்டன. மீதம் இருக்கும் உயிரினங்களில் நாமும் ஒன்று. இனியும் ஒரு அழிவு வராது என்று சொல்ல முடியாது. நிச்சயம் ஏதேனும் ஒரு விண்கல் பூமியை தாக்கினால் ஒட்டு மொத்த உலகமும் அழிந்துவிடும். எனவே இதிலிருந்து நாம் தற்காத்துக்கொள்ள புதிய வழிமுறையை கண்டுபிடிக்க வேண்டி இருக்கிறது. அதனால்தான் விண்வெளி துறைக்கு அதிக முதலீடுகள் அவசியமாகிறது" என்று பல்வேறு விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இவர்கள் கூறியதை போல எதிர் காலத்தில் பூமிக்கு ஆபத்து அதிகம் இருக்கிறது என ஆய்வுகள் தெளிவுப்படுத்தி இருக்கின்றன. அப்படி ஒரு ஆய்வுதான் இன்று பூமிக்கு அருகே சிறுகோள் ஒன்று கடந்து செல்ல இருப்பதை கண்டு பிடித்திருக்கிறது. விமானத்தின் அளவு உள்ள ஒரு சிறுகோள் ஒன்று பூமிக்கு நெருக்கமாக சுமார் 1.06 லட்சம் மைல் தொலைவில் இன்று கடந்து செல்கிறது.
இந்த சிறுகோளுக்கு 2023 VW5 என விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். மணிக்கு 40,469 கி.மீ வேகத்தில் இது பூமியை கடக்கும். தற்போது வரை இதனால் பூமிக்கு ஆபத்து இல்லை என நாசா விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள். ஆனால் இந்த சிறுகோளின் பாதையில் கொஞ்சம் பிசிறு தட்டினாலும் கூட அது பூமிக்கு எமனாக மாறிவிடும் என எச்சரித்துள்ளனர்.
பொதுவாக இப்படியான சிறுகோள்கள் குறித்து பயம்தான் அதிகமாக இருக்கிறது. ஆனால் இந்த சிறு கோள்களில் ஏராளமான ரகசியங்கள் ஒளிந்திருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதாவது சூரிய குடும்பம் உருவானபோதுதான் இந்த சிறுகோள்களும் உருவாகியுள்ளன. ஆனால், இவை சூரியனை விட்டு விலகி இருக்கிறது. எப்போதாவது சில ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் சூரியனுக்கு அருகில் வந்து செல்லும்.
எனவே இதில் இருக்கும் மண், கனிமங்கள், பறைகள் எல்லாம் பெரிய அளவுக்கு மாற்றத்தை சந்தித்திருக்காகது. சூரியனுக்கு பக்கத்திலேயே இருக்கும் புதன், வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் கோள்களில் சூரிய ஒளி பட்டு அங்குள்ள மண், பறை எல்லாம் மாற்றம் அடைந்திருக்கும். இதை வைத்து இந்த சூரிய குடும்பம் எப்படி உருவானது என்பதை நம்மால் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் சிறுகோள்கள் அப்படியல்ல.
இதனை சரியாக ஆராய்ந்தால் பூமி உட்பட இந்த சூரிய குடும்பம் எப்படி உருவானது என்பதற்கான விட கிடைத்துவிடும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த நோக்கத்தின் அடிப்படையில்தான் சமீபத்தில் 'பென்னு' எனும் விண்கல்லில் நாசா ஆய்வு நடத்தி அதிலிருந்து சில மண் துகள்களை பூமிக்கு கொண்டு வந்தது. ஆக என்னதான் சிறுகோள்கள் ஆபத்தானவையாக இருந்தாலும், அதில்தான் பிரபஞ்ச ரகசியமே ஒளிந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications