புடவையை இழுத்து.. தொடையில் கை வைத்து அத்துமீறல்.. நாசிக் ஐடி நிறுவனத்தில் பெண் ஊழியரிடம் வக்கிரம்
மும்பை: இந்தியாவின் மிகப் பெரிய தனியார் ஐடி நிறுவனத்தின் நாசிக் கிளையில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் கொடுத்துள்ள வாக்குமூலம், ஒட்டுமொத்த கார்ப்பரேட் உலகையுமே அதிர வைத்துள்ளது. பாலியல் துன்புறுத்தல், கட்டாய மதமாற்ற முயற்சி என அடுக்கடுக்கான புகார்கள் அங்கே புயலைக் கிளப்பியுள்ளன. இதற்கிடையே பெண் ஒருவர் கொடுத்த வாக்குமூலம் அதிர வைப்பதாக இருக்கிறது.
நாசிக்கில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பெண் ஊழியர்களைக் குறிவைத்து பாலியல் துன்புறுத்தல், கட்டாய மதமாற்ற முயற்சி நடந்ததாக பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது. முதலில் ஒரு பெண் புகார் அளித்த நிலையில், தொடர்ந்து நடந்த விசாரணையில் இது தொடர்பாக அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் ஒரு பெண் மேலாளர் உட்பட எட்டு பேர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாக்குமூலம்
இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண் ஊழியர் ஒருவர் காவல்துறையிடம் அளித்துள்ள வாக்குமூலம் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது கடந்த 2025 ஜூன் 20-ல் தான் அந்த பெண்ணுக்குத் திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்த கையோடு டிசிஎஸ் நிறுவனத்தில் அசோசியேட் பணியில் சேர்ந்துள்ளார் அந்தப் பெண். அவரது கணவர் புனேவில் பணிபுரிய, இவர் நாசிக்கில் உள்ள மாமனார் வீட்டில் இருந்து வேலைக்குச் சென்றுள்ளார்.
பயிற்சி காலத்தின்போது, அந்தப் பெண்ணின் குழுவிற்குச் சற்றும் தொடர்பில்லாத லோன் பிரிவுத் தலைவர் ரஸா மேனன் என்பவர், அடிக்கடி அந்தப் பெண்ணிடம் வந்து அநாகரிகமாகப் பேசத் தொடங்கியுள்ளார். "உன் புருஷன் தான் தூரமா இருக்கிறாரே... அப்புறம் எப்படிச் சமாளிக்கிற? ஹனிமூனுக்கு எங்க போனீங்க? அங்க என்னவெல்லாம் பண்ணீங்க?" என்று அந்தப் பெண் முகம் சுளிக்கும் வகையில் தனிப்பட்ட வாழ்க்கை குறித்துக் கேள்விகளைக் கேட்டுள்ளார்.
பாய் பிரண்ட்
இதற்கு அந்தப் பெண்ணின் டீம் லீடர் ஷாருக் குரேஷியும் உடந்தையாக இருந்தாக கூறப்படுகிறது.. "உனக்கு நிறையப் பாய் பிரண்ட்ஸ் இருந்திருப்பாங்களே... அவங்களை எல்லாம் விட்டுவிட்டு எப்படி கல்யாணம் பண்ணிக்கிட்ட?" என்று மிரட்டும் தொனியில் இவர்கள் பேசியுள்ளனர். அந்தப் பெண்ணுக்கு "பிளேயர்" எனப் பெயரிட்டு அலுவலகம் முழுக்க ரஸா மேனன் கிண்டல் செய்துள்ளார். "என்ன பிளேயர்... வேலையைச் சமாளிக்க முடியலையா?" எனச் சக ஊழியர்கள் முன்னிலையில் கேலி செய்துள்ளனர்.
அத்துமீறல்
கடந்த மார்ச் மாதம் உள்ளூர் பண்டிகைக்காக அந்தப் பெண் சேலை கட்டி வந்தபோது, அலுவலக லாபியில் வைத்து ரஸா மேனன் அந்தப் பெண்ணின் முந்தானையைப் பிடித்து இழுத்ததாகக் கூறப்படுகிறது. புடவையைப் பிடித்து இழுத்தது மட்டுமின்றி, நக்கலாக சிரித்ததாகவும் அந்தப் பெண் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். பயிற்சி முடிந்து பணிக்குச் சேர்ந்த பின்னரும் கொடுமை குறையவில்லை. மற்றொரு ஊழியர் ஒருவர், அந்தப் பெண்ணின் உடல் பாகங்களைத் தொடுவது, தொடையில் கை வைப்பது என அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் எல்லை மீறி, வயிற்றைத் தொட்டுப் பேசியது மட்டுமில்லாமல், கேலரியில் நின்று கொண்டிருந்த அந்தப் பெண்ணைத் திடீரெனக் கட்டிப்பிடித்து வக்கிரத்தைக் காட்டியுள்ளார். "உன் புருஷனுக்கு சமைக்கிற மாதிரி எனக்கும் சமைத்துக் கொடு... உன்னோட உடல் தேவைகளை நான் பூர்த்தி செய்கிறேன்" என அந்தப் பெண்ணிடம் ஆபாசமாகப் பேசியுள்ளார்.
மிரட்டல்
இத்தோடு விட்டுவிடாமல்.. இன்ஸ்டாகிராம், லிங்க்டு இன் எனத் தொடர்ந்து அந்தப் பெண்ணைப் பின் தொடர்ந்த ஆசிப், ஒரு கட்டத்தில் இந்து கடவுள்கள் குறித்து மிகவும் மோசமாகப் பேசியுள்ளார்.. இதற்கு அந்தப் பெண் ஆட்சேபனை தெரிவித்த போது, "நீ வேலையில் முன்னுக்கு வரணும்ல? அப்புறம் ஏன் நான் சொல்றதைக் கேட்க மாட்டேங்குற?" என மிரட்டியுள்ளார்.
இந்தச் சம்பவம் இப்போது பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், இது தொடர்பாக விசாரணை தீவிரமடைந்துள்ளது. இது குறித்து மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கவலை தெரிவித்துள்ளார். இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். இதற்கிடையில், டிசிஎஸ் நிறுவனமும் இது தொடர்பாக விளக்கம் கொடுத்துள்ளது. தங்கள் அலுவலகத்தில் இது போன்ற செயல்களுக்குத் துளியும் இடமில்லை என்றும், குற்றம் சாட்டப்பட்ட ஊழியர்கள் அனைவரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் விளக்கம் அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications