Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரக்கோணம் பாலியல் புகார்.. போலீஸ் மீது மெத்தன புகார்.. தானாக முன்வந்து தேசிய மகளிர் ஆணையம் விசாரணை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரக்கோணம் பாலியல் புகார் தொடர்பான விசாரணையை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன் வந்து கையில் எடுத்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக எஃப்ஐஆர் நகலுடன் விரிவான நடவடிக்கை அறிக்கையை 3 நாட்களுக்குள் கோரியுள்ள தேசிய மகளிர் ஆணையம், வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே காவனூர் பகுதியைச் சேர்ந்த தெய்வசெயல். இவர் திமுக இளைஞரணி துணை அமைப்பாளராக இருக்கிறார். இவர் மீது அரக்கோணத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி திருமண மோசடி புகார் கூறியதோடு, தாம் உட்பட 20க்கும் மேற்பட்ட பெண்களை அரசியல்வாதிகளுக்கு இரையாக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார். இந்த சம்பவம் தமிழ்நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

National commission for women takes up the investigation of the Arakkonam sexual Harassment issue

இதுதொடர்பாக டிஜிபி அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்திருந்தார். அந்த புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், இதுவரை தெய்வச்செயல் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யவில்லை என்று சொல்லப்படுகிறது. இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்ட மாணவி, என் தாய் மற்றும் தந்தையை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டி திருமணம் செய்து கொண்டார்.

இதனால் என் படிப்பும் நாசமாய் போய்விட்டது. அதேபோல் என்னை போல் 20க்கும் மேற்பட்ட பெண்கள் திமுக பிரமுகர் தெய்வச்செயலால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை திமுக கட்சிப் பொறுப்பில் இருந்து தெய்வச்செயல் நீக்கப்படுவதாக அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தார்.

இந்த நிலையில் அரக்கோணம் பாலியல் சம்பவம் தொடர்பாக விசாரணையை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து கையில் எடுத்துள்ளது. இதுதொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் கொடுத்துள்ள அறிக்கையில், திமுக பிரமுகர் மீது கல்லூர் மாணவி அளித்த பாலியல் புகார் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் விசாரணை மேற்கொள்ள உள்ளது.

அந்த விசாரணையில் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட புகார்களும் அடங்கும். மாணவியின் குற்றச்சாட்டில் உள்ள தீவிரத்தன்மையை கருத்தில் கொண்டு தமிழக டிஜிபி-க்கு உடனடியாக வெளிப்படையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கடிதம் எழுதி அறிவுறுத்தி இருக்கிறோம். அதேபோல் பாதிக்கப்பட்ட மாணவியின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

அரசியல் தலையீட்டை தடுப்பது தொடர்பாகவும் அறிவுறுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 3 நாட்களுக்குள் எஃப்ஐ ஆர்-ன் நகலுடன் விரிவான நடவடிக்கை அறிக்கையையும் தேசிய மகளிர் ஆணையம் கோரி இருக்கிறது. இதனால் திமுக பிரமுகர் தெய்வச்செயல் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+