எஸ்டிபிஐ தலைவர் நெல்லை முபாரக் வீடு உட்பட தமிழ்நாட்டில் 24 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
சென்னை: தமிழ்நாட்டில் இன்று காலை முதல் 24 இடங்களில் தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ.) (NIA) அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலியில் எஸ்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் முபாரக் வீட்டிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கும்பகோணம் அருகே திருபுவனத்தில் மதமாற்ற பிரசாரத்தைத் தடுத்ததாக கூறி 2019-ல் ராமலிங்கம் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருபுவனம் ராமலிங்கம் கொலை தொடர்பாக என்.ஐ.ஏ. விசாரித்து வருகிறது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடர்பாக இன்று காலை முதல் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தம் 24 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
திருநெல்வேலியில், எஸ்டிபிஐ கட்சித் தலைவர் நெல்லை முபாரக் வீட்டிலும் இன்று காலை முதல் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். திருபுவனம் ராமலிங்கம் கொலை தொடர்பாக தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், திருபுவனம், பாபநாசம் உள்ளிட்ட 7 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சை, நெல்லை, புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, கோவை, திருப்பூர், விழுப்புரம், மயிலாடுதுறை மாவட்டங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இந்த சோதனைகளை நடத்தி வருகின்றனர். திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் தலைமறைவாக இருக்கும் பயங்கரவாதிகள் தொடர்பாக இந்த சோதனைகள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications