சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விழா மேடையில் நெகிழ்ச்சி.. ஸ்டாலினிடம் ஆட்டோகிராப் கேட்டு வாங்கிய நாவலர் நெடுஞ்செழியனின் மருமகள்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக முன்னாள் அமைச்சரும், தமிழகத்தின் இடைக்கால முதலமைச்சராகவும் பதவி வகித்த நாவலர் நெடுஞ்செழியனின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நாவலர் நெடுஞ்செழியனுக்கு சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் உருவச் சிலை அமைத்தது.

சென்னை சேப்பாக்கம் புதிய அரசு விருந்தினர் மாளிகையில் அமைக்கப்பட்டுள்ள நாவலர் நெடுஞ்செழியன் உருவச்சிலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். நாட்டுடையாக்கப்பட்ட நாவலர்
நெடுஞ்செழியனின் நூல்களுக்கான நூலுரிமை தொகை ரூ.20 லட்சத்தையும் முதல்வர் வழங்கினார்.

சென்னை-சேலம் 8 வழி சாலை திட்டம்.... மக்கள் பக்கமா? மத்திய அரசு பக்கமா? தமிழக அரசுக்கு ராமதாஸ் கேள்வி சென்னை-சேலம் 8 வழி சாலை திட்டம்.... மக்கள் பக்கமா? மத்திய அரசு பக்கமா? தமிழக அரசுக்கு ராமதாஸ் கேள்வி

நாவலர் நெடுஞ்செழியன் உருவச்சிலை திறப்பு

நாவலர் நெடுஞ்செழியன் உருவச்சிலை திறப்பு

இந்த விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், ஏ.வ.வேலு உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், ''தந்தை பெரியாரையே பேச்சால் கவர்ந்த நாவலர்- பேரறிஞர் அண்ணாவையே ஆளுமைத் திறத்தால் வென்ற பொதுச்செயலாளர்-
முத்தமிழறிஞர் கலைஞரை அன்பால் வசப்படுத்திய பண்பாளர். அறிவார்ந்தோர் அவையில் நடமாடும்பல்கலைக்கழகமெனப் போற்றப்பட்ட அறிவாளர்-என் திருமணத்தை முன்னின்று நடத்திய அன்பாளர்-நெடுஞ்செழியனார்க்கு இன்று சிலை திறந்தோம்.என்றும் அவர் இதயமெல்லாம் வாழ்வார்'' என்று கூறியுள்ளார்.

கல்யாணி மதிவாணன்

கல்யாணி மதிவாணன்

இந்த நிலையில் நாவலர் நெடுஞ்செழியன் உருவச்சிலை திறப்பு விழாவில் சுவாரசிய நிகழ்வு நடந்தேறியது.உருவச்சிலை திறப்பு விழாவில் பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்ட நிலையில் நாவலர் நெடுஞ்செழியனின் மருமகளும், மதுரை காமராசர் பல்கலைகழக முன்னாள் துனை வேந்தருமான கல்யாணி மதிவாணனனும் கலந்து கொண்டார்.

முதல்வரிடம் ஆட்டோகிராப் வாங்கினார்

முதல்வரிடம் ஆட்டோகிராப் வாங்கினார்

அப்போது முதல்வர் ஸ்டாலின், கல்யாணி மதிவாணனனுடன் பேசிக் கொண்டிருந்த நிலையில் ஆட்டோகிராப் போட்டு தரும்படி முதல்வர் ஸ்டாலினிடம் கல்யாணி வேண்டுகோள் வைத்தார். இதனை ஏற்றுக் கொண்ட முதல்வரும், அவருக்கு ஆட்டோகிராப் போட்டு கொடுத்தார். அங்கு இருந்த நிருபர்களிடம் ஸ்டாலினின் ஆட்டோகிராப்பை நெகிழ்ச்சியுடன் காண்பித்த கல்யாணி மதிவாணன் ஸ்டாலினை புகழ்ந்து பேசினார்.

எனக்கு பிடித்த தலைவர்

எனக்கு பிடித்த தலைவர்

''எனது வாழ்நாளில் முதல்முறையாக முதல்வர் மு. க. ஸ்டாலிடன்தான் "ஆட்டோகிராப்" வாங்கியுள்ளேன். முதல்வர் ஸ்டாலின் மிக சிறப்பான செயல்பட்டு வருகிறார். செயல்படுகளால் என்னை கவர்ந்து விட்டார். எனக்கு பிடித்த தலைவராகி விட்டார்'' என்று கல்யாணி மதிவாணன் நெகிச்சியுடன் பேசினார்.

English summary
Kalyani Mathivanan, daughter-in-law of navalar nedunchezhiyan asked for an autograph from Tamil Nadu Chief Minister MK Stalin. Stalin unveiled the statue of the navalar nedunchezhiyan today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X