இரட்டை குழந்தைகளுடன் "தல" தீபாவளி.. நயன்தாரா - விக்னேஷ் சிவன் வெளியிட்ட தீபாவளி வாழ்த்து வீடியோ
சென்னை: தங்கள் இரட்டை குழந்தைகளுடன் தீபாவளி பண்டிகை கொண்டாடிய இயக்குநர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதி, குழந்தைகளுடன் மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்கள்.
இயக்குநர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதனால் பல விமர்சனங்கள் எழுந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் இருவரும் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.
இந்த திருமணத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் உள்ளிட்ட திரைபிரபலங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

நயன் - விக்னேஷ் தம்பதி
இதனை தொடர்ந்து உலக நாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்த தம்பதி சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளதாக விக்னேஷ் சிவன் சமூக வலைதளத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார்.

வாடகைத் தாய்
நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் 2 குழந்தைகளையும் பிடித்தபடி இருந்தனர். இருவருக்கும் ரசிகர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்த நிலையில், வாடகை தாய் மூலம் நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி குழந்தை பெற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

விதிமீறல்
நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி சட்ட விதிகளை மீறி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டுள்ளதாக பலர் குற்றம்சாட்டினர். இந்த விவகாரம் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் வரை சென்றது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

போலீசில் புகார்
இதனை தொடர்ந்து தமிழக சுகாதாரத்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டு வாடகைத் தாய் மூலம் நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதி குழந்தை பெற்றது தொடர்பாக விசாரணையும் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே சட்ட விதிகளை பின்பற்றாமல் வாடகைதாய் மூலம் குழந்தை பெற்றுள்ளதாக நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மீது வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் புகாரளித்தார்.

வழக்கறிஞர் கோரிக்கை
சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் அவர் அளித்த புகாரில், "மத்திய, மாநில அரசுகளின் விதியை மீறி திருமணமாகி ஓராண்டு நிறைவடையாமல் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுள்ள நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதி மீது மத்திய மற்றும் மாநில வாடகை தாய் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று வலியுறுத்தி இருந்தார்.

தீபாவளி வாழ்த்து
ஒருபக்கம் இப்படி விமர்சனங்களும், புகார்களும், நடவடிக்கைகளும் சென்றுகொண்டிருக்க நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி இதுகுறித்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்த நிலையில், இருவரும் தங்களின் இரட்டை குழந்தைகளுடன் மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications