ஞானசேகரன் மீது 20 வழக்குகள் நிலுவையில் இருந்தும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? மகளிர் ஆணையம்
சென்னை: குற்ற வழக்கில் தொடர்புடைய நபரை இயல்பாக நடமாட தமிழக அரசு எப்படி அனுமதித்தது என தேசிய மகளிர் ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் விசாரணை நடத்த தேசிய மகளிர் ஆணையம் நேற்று சென்னை வந்தது. இந்த சம்பவம் தொடர்பாக 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது பல்கலைக்கழக பதிவாளர், பேராசிரியர்கள், போஷ் குழு உறுப்பினர்கள் ஆகியோரிடம் முதல் கட்டமாக விசாரணை நடத்தியுள்ளனர். பல்கலைக்கழகத்தில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், சிசிடிவி கேமரா குறித்தும் விசாரணை நடத்தியுள்ளனர்.
தொடர்ந்து மாணவ, மாணவிகளிடமும் பல்கலைக்கழக காவலாளிகள், விடுதி வார்டன்கள், உள்ளிட்டோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமாரி தலைமையில் 4 பேர் கொண்ட உறுப்பினர்கள் வந்திருந்தனர்.
விசாரணை இன்னும் முழுவதுமாக முடிவடையாத நிலையில் இதுகுறித்து தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் மம்தா குமார் கூறியதாவது: விசாரணை இன்னும் முடியவில்லை. இன்றும் நடைபெற்றது. தமிழக ஆளுநரை சந்தித்தோம். இந்த விசாரணைக்கு பிறகு பாலியல் வன்கொடுமை குறித்த இறுதிகட்ட அறிக்கை மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்படும்.
பாதிக்கப்பட்ட மாணவியிடம் விசாரணை நடத்தினோம். குற்ற வழக்கில் தொடர்புடைய ஞானசேகரன் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்திருப்பதாக சொல்கிறார்கள். எனினும் குற்ற வழக்கில் தொடர்புடைய நபரை இயல்பாக நடமாட தமிழக காவல் துறை எப்படி அனுமதித்தது என கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 23 ஆம் தேதி மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக பிரியாணி கடை நடத்தும் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
பாலியல் பலாத்கார சம்பவத்தால் பெரும் அதிர்வலைகள் எழுந்துள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். மேலும் அந்த பெண் குறித்த தகவல்கள் அடங்கிய எஃப்ஐஆர் காப்பி கசிந்தது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தது.
அது போல் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ 25 லட்சம் இழப்பீடும், அவர் கல்வி கற்கும் வரை தேர்வு கட்டணம், கல்வி கட்டணம் உள்ளிட்டவற்றை பெறக் கூடாது என்றும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications