சீச்சீ.. ரெஸ்டாரண்ட்டில் சாக்கடை அடைப்பு..இவர் எதை வைத்து சரி செய்கிறார் பாருங்க.. அதிர்ச்சி வீடியோ
ரெஸ்டாரெண்ட் கரண்டியால் சாக்கடையை சுத்தம் செய்துள்ளார் ஒரு நபர்
சென்னை: ஃபாஸ்ட் புட்டில் உள்ள கரண்டியை எடுத்து, சாக்கடை அடைப்பை சரி செய்துள்ளார் ஒருவர்.. இதை பார்த்துதான் பொதுமக்கள் அதிர்ந்து போய் உள்ளனர்.
ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.. சென்னை துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம் பஸ் ஸ்டேண்ட் அருகே தில்லை பாண்டியன் என்ற ரெஸ்டாரண்ட் இயங்கி வருகிறது.
பொதுமக்கள் அதிகம் நிறைந்த பகுதியில் உள்ள ஃபாஸ்ட் புட் செயல்பட்டு வருகிறது.. அதனால் எந்நேரமும் கூட்டம் அதிகமாக இருக்கும்.

சாக்கடை
இந்நிலையில், இந்த ரெஸ்டாரண்ட்டின் வாயிலில் உள்ள சாக்கடை அடைத்து கொண்டுள்ளது போலும்.. அதாவது ரெஸ்ட்டாரண்டில் இருந்து வரும் கழிவுநீர்தான் இந்த சாக்கடையில் வந்து அடைப்பை ஏற்படுத்தி இருக்கலாம் என்று தெரிகிறது.. அந்த அடைப்பை சரி செய்தால்தான், ரெஸ்டாரெண்ட் நீர் வெளியேற முடியும்.. அதனால், அந்த ரெஸ்டாரண்ட் ஓனர் அந்த அடைப்பை சரி செய்ய முயன்றார்.

வீடியோ
அதற்காக, பாஸ்ட்புட்டில் சிக்கன் ரைஸ் வகைகளை கிண்டுவதற்கு பயன்படுத்துவார்களே, அந்த நீளமான கரண்டியை எடுத்து கொண்டு வந்து, சாக்கடை அடைப்பை சரி செய்துள்ளார் ஓட்டல் ஓனர் பாண்டியன். ஒரு பெரிய கரண்டியை சாக்கடையில் விட்டு சரி செய்வதை, அந்த வழியாக சென்றவர்கள் கவனித்துள்ளனர்.. இதைதான் வீடியோவாக எடுத்து சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டுவிட்டனர்...

கரண்டி
இரவு நேரம் இந்த சம்பவம் நடந்துள்ளது.. தனி ஒருவராகவே சாக்கடை அடைப்பை சரி செய்கிறார் ஓனர்.. உதவிக்கு யாரும் வரவில்லை.. சாக்கடையில் இருந்த அடைப்புகளை அந்த கரண்டியாலேயே அள்ளி அள்ளி வெளியே எடுத்து போடுகிறார்.. ஓனரும் மாஸ்க் போடவில்லை. அங்கு நடமாடுபவர்களும் மாஸ்க் போடவில்லை. இந்த வீடியோவை பார்த்ததுமே, அந்த கரண்டிதான் சிக்கன் ரைஸ் பிரியர்களுக்கு பெருத்த அதிர்ச்சியை தந்துள்ளது.. இதுகுறித்து நடவடிக்கை வேண்டும் என்றும் குரல் எழுந்துள்ளது.

அதிர்ச்சி
காரணம், இது மிகப்பெரிய சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளதாக அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த ரெஸ்டாரண்டை இன்னொருத்தரிடமிருந்து, இந்த ஓனர் வாங்கி உள்ளார்.. ஒரு மாதம்தான் ஆகிறதாம்.. அதற்குள் சாக்கடை பிரச்சனை வந்துள்ளது.. அது சரி, ஓனர் பாண்டியன் அந்த கரண்டியை என்ன செய்திருப்பார்?
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications