சைலண்டாக ’நீட்’ தேர்வெழுதிய திமுக முக்கிய புள்ளியின் வாரிசின் வாரிசு.. வந்து வழியனுப்பிய குடும்பம்!
சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடும் கட்டுப்பாடுகளுடன் நேற்று நடந்தது. நாடு முழுவதும் சுமார் 23 லட்சம் பேரும், தமிழகத்தில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் பேரும் இந்த தேர்வை எழுதியிருந்தனர். அந்த வகையில் சென்னையில் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடியின் பேரன் சேத்துப்பட்டு பகுதியில் இருந்த தேர்வு மையத்தில் தேர்வு எழுதினார். அவரை அவரது தந்தை கவுதம சிகாமணி உள்ளிட்டோர் தேர்வு மையத்துக்குள் வாழ்த்தி அனுப்பினர்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு தேசிய தேர்வுகள் முகமை நீட் தேர்வை நடத்தி வருகிறது. ஆண்டுதோறும் ஒவ்வொரு கல்வி ஆண்டு தொடக்கத்திற்கு முன் இந்த தேர்வு நாடு முழுவதும் நடத்தப்படுகிறது.
மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வு கட்டாயம் என்பதால் மாணவர்கள் அதற்காக தயாராகி வருகின்றனர். நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணை கொண்டு தான் மருத்துவ படிப்பில் சேர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 2025 - 2026 ஆம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது.

பிற்பகல் 2 மணி தொடங்கி மாலை 5 20 மணி வரை நடந்த நிலையில், நாடு முழுவதும் இந்த தேர்வை 23 லட்சம் மாணவ மாணவிகள் எழுதினர். தமிழகத்தில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் மாணவ மாணவிகள் நீட் தேர்வை எழுதினர். நீட் தேர்வுக்காக 5,453 தேர்வு மையங்கள் இந்தியாவில் அமைக்கப்பட்டு இருந்தது. இது மட்டுமல்லாமல் 13 வெளிநாடுகளிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் மாணவ மாணவிகள் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்தனர்.
சென்னையில் மட்டும் 40க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். தொடர்ந்து வழக்கமான கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் சோதனைகளுக்கு பிறகு தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். சாதாரண உடை அணிந்து வந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். மூக்குத்தி, மோதிரம் உள்ளிட்ட ஆபரணங்கள் அணிந்து வந்தவர்கள் அதனை தேர்வு மையத்துக்கு வெளியே அகற்றிவிட்டு சென்றனர்.
இந்தாண்டும் நீட் தேர்வில் பல சுவாரசிய சம்பவங்களும் சோகம் தரும் சம்பவங்களும் நடந்தது. நீட் தேர்வு எழுதச் சென்ற மூன்று மாணவர்கள் ராஜஸ்தானில் பரிதாபமாக விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். புதுக்கோட்டையில் நீட் தேர்வு எழுத சென்ற ஒரு மாணவி திடீரென மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதே நேரத்தில் நீட் தேர்வுக்கு பயந்து உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்களும் இந்த ஆண்டு அரங்கேறியது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அதே நேரத்தில் தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் தூத்துக்குடியைச் சேர்ந்த 61 வயது சித்த மருத்துவர் பச்சை நேற்று தூத்துக்குடி செயின்ட் மேரிஸ் பள்ளியில் நீட் தேர்வை எழுதினார். இது ஒருபுறம் இருக்க சென்னையில் நேற்று 41 மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. அந்த வகையில் சென்னை சேத்துப்பட்டு சென்னை கிறிஸ்தவ கல்லூரி பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த நீட் தேர்வு மையத்தில் தமிழ்நாடு முன்னாள் வனத்துறை அமைச்சரும், எம்எல்ஏவுமான பொன்முடியின் பேரனும், முன்னாள் எம்பி கௌதம சிகாமணியின் மகன் தேர்வு எழுதினார். தேர்வு மையத்துக்கு கௌதம சிகாமணி மற்றும் அவரது மனைவியின் சகோதரர்கள் என வந்து அவரது ஆவணங்கள், ஹால் டிக்கெட் உள்ளிட்டவை சரியாக இருக்கிறதா என சரிபார்த்துவிட்டு, வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications