நீட் தேர்வு.. தற்கொலை செய்து கொண்ட ஆதித்யா உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு.. தருமபுரியில் போராட்டம்
தருமபுரியில் நேற்று தற்கொலை செய்து கொண்ட மாணவர் ஆதித்யா உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
சென்னை: தருமபுரியில் நேற்று தற்கொலை செய்து கொண்ட மாணவர் ஆதித்யா உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
நீட் தேர்வு அச்சம் காரணமாக தமிழகத்தில் அடுத்தடுத்து மாணவர்கள் தற்கொலை செய்து வருகிறார்கள். நேற்று மட்டும் ஒரே நாளில் 3 பேர் தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்டார்கள். நீட் தேர்வு அச்சம் காரணமாக தருமபுரியை சேர்ந்த ஆதித்யா என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

முன்னதாக நேற்று காலை நீட் தேர்வு எழுத தயாராகி வந்த மதுரையை சேர்ந்த மாணவி ஜோதி ஸ்ரீதுர்கா, தேர்வு அச்சம் காரணமாக இன்று தற்கொலை செய்து கொண்டார். அதன்பின் நேற்று இரவு நாமக்கல்லை சேர்ந்த மோதிலால் தற்கொலை செய்து கொண்டார்.
அடுத்தடுத்து மூன்று தற்கொலைகள் தமிழகத்தை உலுக்கி உள்ளது. இந்த நிலையில் தருமபுரியில் நேற்று தற்கொலை செய்து கொண்ட மாணவர் ஆதித்யா உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை வைத்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். மருத்துவமனை வளாகம் முன் உறவினர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். நீட் தேர்வை ரத்து செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என்று கூறி போராட்டம் நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications