நீட் தேர்வு முடிவுகள்.. தமிழ்நாட்டில் 67,787 பேர் தேர்ச்சி.. யாருக்கு முதலிடம்? தேசிய ரேங்க் என்ன?
சென்னை: இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது.
நாடு முழுக்க 7,78,725 பேர் கடந்த முறை இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு எழுதினர். மொத்தம் 497 நகரங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. அதில் 3570 சென்டர்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 13 மொழிகளில் இந்த தேர்வு நடத்தப்பட்டது.
இந்த நிலையில் நேற்று நீட் தேர்வு முடிவுகள் வெளியானது. neet.nta.nic.in என்ற இணையதளத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

நீட் தேர்வு
ஆனால் முடிவுகள் வெளியானதும் பலர் அந்த பக்கத்தில் மதிப்பெண்களை சோதனை செய்ததால் மொத்தமாக இணைய பக்கம் சில நிமிடங்கள் முடங்கியது. இந்த பக்கத்தில் பிறந்த தேதி மற்றும் பதிவு எண் ஆகியவற்றை குறிப்பிட்டு தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள முடியும். சிபிஎஸ்இ முடிவுகள் வராமல் இருந்த காரணத்தால் நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் சிபிஎஸ்இ முடிவுகள் வெளியே வந்ததால் தற்போது நீட் முடிவுகள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முடிவுகள்
இந்த நீட் தேர்வில் இந்திய அளவில் பொதுப்பிரிவில் தனிஸ்கா என்ற ராஜஸ்தான் மாணவி முதலிடம் பெற்றுள்ளார். இவர் 715 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அவரை தொடர்ந்து வட்சா ஆஷிஷ் பத்ரா என்ற மாணவர் 715 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம் பிடித்துள்ளார். எஸ்.சி பிரிவில் ஜெயந்த் மவுரியா என்பவர் 695 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.

தமிழ்நாடு
நீட் தேர்வு எழுதியவர்களில் தமிழ்நாட்டில் 67,787 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருத்தேவ் விநாயகா என்ற மாணவர் 705 மதிப்பெண்கள் பெற்று தமிழ்நாட்டில் முதலிடம் பெற்றுள்ளார். இந்திய அளவில் அவர் 30வது இடத்தை பிடித்துள்ளார். ஹரிணி என்ற தமிழ்நாடு மாணவி தமிழ்நாட்டில் இரண்டாம் இடமும். தேசிய அளவில் 43வது இடமும் பெற்றுள்ளார். அதேபோல் எஸ்சி பிரிவில் தமிழ்நாடு மாணவர் பிரதாப் இந்திய அளவில் 7ம் இடம் பிடித்துள்ளார். அவர் 686 மதிப்பெண்கள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டம்
நாடு முழுக்க எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு நீட் நுழைவு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. நீட் நுழைவு தேர்விற்கு எதிராக தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவிற்கு இன்னும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த நிலையில்தான் கடந்த ஜூலை 17ம் தேதி நாடு முழுவதும் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நடைபெற்றது. தமிழ்நாட்டில் மட்டும் 1.40 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications