குறுக்கிட்ட நயினார்.. மாஸ்க்கை கழற்றிவிட்டு.. ஆங்கிலத்தில் சீறிய அப்பாவு.. "ஆஃப்" செய்த துரைமுருகன்!
சென்னை: இன்று நீட் விலக்கு மசோதா மீதான விவாதத்தின் போது அவையில் சபாநாயகர் அப்பாவு, பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், அமைச்சர் துரைமுருகன் இடையே காரசார விவாதம் நடந்தது.
Recommended Video
நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர். என் ரவி தமிழ்நாடு சபாநாயகருக்கு திருப்பி உள்ளார். ஆளுநர் திருப்பி அனுப்பிய இந்த மசோதாவை இன்று தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மீண்டும் அவையில் தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு கோரும் மசோதா மீது தற்போது அவையில் விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் முன்பே பாஜக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்ய காத்து இருந்தனர்.

சபாநாயகர் அப்பாவு
ஆனால் சபாநாயகர் அப்பாவு, கொஞ்சம் பொறுத்திருங்கள்.. அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசுவதை மட்டுமாவது கேட்டுவிட்டு வெளியே செல்லுங்கள்.. எதுவும் தப்பில்லை என்று கிண்டலாக சிரித்தபடி குறிப்பிட்டார். இதையடுத்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் மசோதாவை தாக்கல் செய்து, உரையை முடித்தார். இதையடுத்து எம்எல்ஏ பூவை ஜெகன் மூர்த்தியை பேசும்படி சபாநாயகர் அப்பாவு அழைத்தார்.

மா. சுப்பிரமணியன்
ஆனால் அவர் எழுந்து பேசும் முன் பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேசினார்.. இதற்கு சபாநாயகர் அப்பாவு தான் அணிந்து இருந்த மாஸ்க்கை அகற்றிவிட்டு .. நீங்கள் இப்போ பேச வேண்டாம். உங்கள் நேரம் வரும். அப்போது நீங்கள் பேசலாம். உங்கள் வாய்ப்பு வந்ததும் பேசுங்கள். பேசிய பின் இருக்க விருப்பம் இருந்தால் அவையில் இருக்கலாம். இல்லை வெளியே போக விரும்பினாலும் போகலாம்.

நயினார் நாகேந்திரன்
கருத்தை பேசிவிட்டு நீங்கள் வெளியேறலாம் என்று நயினார் நாகேந்திரனிடம் அப்பாவு குறிப்பிட்டார். அதற்கு கீழே இருந்த நயினார்.. ஒரு 2 நிமிடம் கொடுங்கள்.. பேசிவிட்டு செல்கிறேன் என்றார்.. அதற்கு அப்பாவு அட ஏன் 2 நிமிஷம் .. 5 நிமிடம் கூட எடுத்துக்கோங்க என்று கூறினார். ஆனால் நயினார் தொடர்ந்து பேச வேண்டும் என்று கேட்டுக்கொண்டு இருந்தார். கீழே இருந்து தொடர்ந்து நயினார் பேச வேண்டும் என்று கூறிக்கொண்டே இருந்தார்.

பூவை ஜெகன் மூர்த்தி
பூவை ஜெகன் மூர்த்தி பேசிய போது அவரை அனுமதிக்காமல் நயினார் நாகேந்திரன் பேசிக்கொண்டே இருந்தார். இதையடுத்து சட்டென ஆங்கிலத்தில் பேசிய அப்பாவு.. "ஓகே நோ பிராப்ளம்".. பேசுங்க என்று கூறினார். ஒரு வழியாக வாய்ப்பு கிடைத்த நயினார் பூவை ஜெகனுக்கு முன்பாக பேசினார். இதையடுத்து நயினார், நீட் விலக்கு மசோதா பற்றி பேசினார். அதில் இந்த மசோதாவை நாங்கள் ஆதரிக்கவில்லை. எனவே கடந்த முறை இந்த மசோதா ஒரு மனதாக நிறைவேற்றப்படவில்லை, என்று குறிப்பிட்டார்.

நீட் மசோதா
அதற்கு அப்பாவு, அவையில் யார் இருக்கிறார்களோ அவர்களை வைத்துதான் ஒரு மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக இல்லையா என்று கூற முடியும். நீங்கள் அன்று வெளிநடப்பு செய்துவிட்டீர்கள் என்று குறிப்பிட்டார். இதற்கு குறுக்கிட்ட அமைச்சர் துரைமுருகன், அன்று பாஜகவினர் வெளிநடப்பு செய்துவிட்டனர். மீதம் உள்ள உறுப்பினர்கள் ஒருமனதாக மசோதாவை நிறைவேற்றினார்கள்.

துரைமுருகன்
விதிப்படி இதுபோன்ற சமயங்களில் மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாகவே கருதப்படும் என்று கூறினார். இதையடுத்து நயினார் எழுந்து பேச முயன்றார். அப்போது குறுக்கிட்ட அப்பாவு, நீங்கள் வெளியே செல்வதற்கு இவ்வளவு பில்டப் செய்ய வேண்டாம். போக விருப்பம் என்றால் சென்று விடுங்கள். ஏன் சுற்றி வளைத்து பேசிக்கொண்டு இருக்கிறீர்கள் என்று கிண்டலாக குறிப்புட்டார். இதையடுத்து அவையில் சிரிப்பலைகள் எழுந்தன.
-
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications