Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீட்.. டெல்லிக்கு அனுப்பப்பட்ட "பந்து".. திமுகவின் 8 பெரிய மூவ்.. இறங்கி வந்த ஆளுநர்! நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீட் விலக்கு சட்ட மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி உள்ளார் கவர்னர் ஆர்.என்.ரவி. ஆளும் தரப்பின் நீண்ட போராட்டத்திற்கு பின் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    சட்டசபையில் முதல்வர் பேச்சு | 04-05-2022 | Oneindia Tamil

    இன்று சட்டசபை கூட்டத்திற்கு இடைப்பட்ட நேரத்தில் ஆளுநரின் செயலர் முதல்வர் ஸ்டாலினுக்கு போன் செய்து இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் உடனே அந்த தகவலை அவையில் தெரிவித்தார்.

    நீட் விலக்கு மசோதாவிற்கு குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற உள்துறை அமைச்சகத்திற்கு ஆளுநர் மூலம் மசோதா அனுப்பப்பட்டுள்ளது.. நமது தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி இது என்று முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் விளக்கம் அளித்துள்ளார்.

    ஆளுநர் மோதல்

    ஆளுநர் மோதல்

    ஆளுநருக்கு எதிராக ஆளும் திமுக அரசு கடுமையான பல்வேறு மூவ்களை எதிர்ப்புகளை காட்டியதன் விளைவாக இந்த மசோதாவை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி உள்ளார். ஆளுநர் - அரசு இடையே கடுமையான மோதல் நிலவி வந்த நிலையில், ஆளுநரின் இந்த முடிவு , இரண்டு தரப்பிற்கும் இடையிலான மோதலை சாந்தப்படுத்தும் விதமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆளுநரின் இந்த முடிவிற்கு பின் எங்களின் தொடர் போராட்டம்தான் காரணம் என்று முதல்வரே சட்டசபையில் சொல்லி இருக்கிறார்.. ஆளுநருக்கு எதிராக அப்படி திமுக எடுத்துவைத்த மூவ்கள்தான் என்னென்ன.. ஆளுநர் திடீரென இந்த முடிவை எடுத்தது எப்படி என்று பார்க்கலாம்.

    திருப்பி அனுப்பினார்கள்

    திருப்பி அனுப்பினார்கள்

    மூவ் 1 - முதல் கட்டமாக நீட் விவகாரத்தில் திமுக தீவிரம் காட்டியது, இரண்டாவது முறை மசோதாவை நிறைவேற்றிய பின்தான். முதல்முறை மசோதாவை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாத நிலையில் இரண்டாவது முறை மீண்டும் அனுப்பியது. தமிழ்நாடு சட்டசபை வரலாற்றில் இப்படி ஒரு சம்பவம் நடப்பது அரிது என்பதால் இதன் வீரியம் அப்போதே பெரிதானது.

    மூவ் 2 - இரண்டாவதாக நேரடியாக பிரதமர் மோடியிடமே முதல்வர் ஸ்டாலின் முறையிட்டார். பிரதமரை நேரில் சந்தித்த போது நேரடியாக முதல்வர் ஸ்டாலின் அவரிடம் நீட் விவகாரம் பற்றி பேசினார். இது தேசிய அளவில் கவனம் பெற தொடங்கியது. உள்துறை அமைச்சரிடம் பல நாள் காத்து கிடந்து தமிழ்நாடு எம்பிக்கள் இது பற்றி முறையிட்டனர். தேர்தல் நேரம் என்று கூறி அமித் ஷா தமிழ்நாடு எம்பிக்களை பார்க்க மறுத்தாலும், காத்திருந்து பார்த்துவிட்டு, நீட் பற்றி புகார் அளித்தனர்.

    மூவ் 3 - மாநிலங்களையில் பேசிய திமுக எம்.பி. வில்சன் ஆளுநர்களின் அதிகாரத்திற்கு எதிராக மசோதா தாக்கல் செய்தார். அதில், மாநில சட்டமன்றங்களால் அனுப்பப்படும் மசோதாக்கள் மீது கவர்னர்கள் முடிவெடுப்பதற்கான காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும். இதற்காக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 200-வது பிரிவை திருத்த வேண்டும் என்று தனி உறுப்பினர் மசோதாவை தாக்கல் செய்தது.

    மூவ் 2 - இரண்டாவதாக நேரடியாக பிரதமர் மோடியிடமே முதல்வர் ஸ்டாலின் முறையிட்டார். பிரதமரை நேரில் சந்தித்த போது நேரடியாக முதல்வர் ஸ்டாலின் அவரிடம் நீட் விவகாரம் பற்றி பேசினார். இது தேசிய அளவில் கவனம் பெற தொடங்கியது. உள்துறை அமைச்சரிடம் பல நாள் காத்து கிடந்து தமிழ்நாடு எம்பிக்கள் இது பற்றி முறையிட்டனர். தேர்தல் நேரம் என்று கூறி அமித் ஷா தமிழ்நாடு எம்பிக்களை பார்க்க மறுத்தாலும், காத்திருந்து பார்த்துவிட்டு, நீட் பற்றி புகார் அளித்தனர்.

    மூவ் 3 - மாநிலங்களவையில் பேசிய திமுக எம்.பி. வில்சன் ஆளுநர்களின் அதிகாரத்திற்கு எதிராக மசோதா தாக்கல் செய்தார். அதில், மாநில சட்டமன்றங்களால் அனுப்பப்படும் மசோதாக்கள் மீது கவர்னர்கள் முடிவெடுப்பதற்கான காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும். இதற்காக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 200-வது பிரிவை திருத்த வேண்டும் என்று தனி உறுப்பினர் மசோதாவை தாக்கல் செய்தது.

    மசோதா தாக்கல்

    மசோதா தாக்கல்

    மூவ் 4 - தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறக்கோரி, மக்களவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர திமுக நோட்டீஸ் அனுப்பியது. இது ஏற்கப்படவில்லை என்றாலும் மிக முக்கியமான தீர்மானமாக பார்க்கப்பட்டது. திமுக எம்பி டி ஆர் பாலு மூலம் கொண்டு வரப்பட்ட இந்த தீர்மானம் தேசிய அளவில் கவனம் பெற்றது.

    மூவ் 5- ஆளுநரை எதிர்க்கும் வகையில் அவர் கொடுத்த தேநீர் விருந்தை முதல்வர் ஸ்டாலின், திமுக அமைச்சர்கள், ஆளும் கட்சியின் கூட்டணி கட்சிகள் மொத்தமாக புறக்கணித்தன.

     கருப்பு கொடி

    கருப்பு கொடி

    மூவ் 6 - இதுவரை அமைதியான போராட்டங்கள் இதன்பின் விஸ்வரூபம் எடுத்தது. ஆளுநருக்கு எதிராக திமுகவின் கூட்டணி கட்சிகள் மயிலாடுதுறையில் தீவிரமாக போராட்டம் நடத்தின. கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டம் செய்தன. இது ஆளுநருக்கு பெரிய நெருக்கடி கொடுத்தது.

    மூவ் 7 - இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க முதல்வர் ஸ்டாலின் போகும் இடங்களில் எல்லாம் ஆளுநரை பற்றி கேள்வி கேட்க தொடங்கினார். கேரளாவிலும் ஆளுநருக்கு எதிராக முதல்வர் உரையாற்றினார். போஸ்ட்மேன் வேலையை கூட ஆளுநர் சரியாக செய்யாமல் இருப்பது அவர் வகிக்கும் பதவிக்கு அழகு அல்ல என்று முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்தார்.

    மூவ் 8 - இது போக ஆளுநர் சென்று வந்த அயோத்தி மண்டபத்தை கைப்பற்ற இந்து சமய அறநிலையத்துறை முயன்றது, துணை வேந்தர் மாநாட்டால் ஆளுநரின் துணை வேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை நீக்கி மசோதா நிறைவேற்றியது என்று ஆளுநர் செல்லும் இடங்களில் எல்லாம் திமுக கேட் போட்டது. ஆளுநருக்கு கடுமையான நெருக்கடியை இது கொடுத்தது.

    வேறு வழியில்லை

    வேறு வழியில்லை

    விளைவு தற்போது ஆளுநர் ஆர். என் ரவி தமிழ்நாடு சட்டசபையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்ட மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி உள்ளார். தொடர் அழுத்தம் காரணமாக வேறு வழியின்றி ஆளுநர் இந்த மசோதாவை டெல்லிக்கு அனுப்பி உள்ளார். ஆளுநர் இதை செய்யாத பட்சத்தில் அதற்கு எதிராக ஆளும் திமுக அரசு சட்ட ரீதியாக போராடும் வாய்ப்புகள் உள்ளன. ஏற்கனவே பேரறிவாளன் வழக்கில் ஆளுநர் தரப்பிற்கு உச்ச நீதிமன்றம் கடும் டோஸ் விட்டுள்ளது.

    அடுத்து என்ன?

    அடுத்து என்ன?

    இந்த நிலையில்தான் ஆளுநர் அரசுக்கு சாதகமான முடிவை எடுத்துள்ளார். இனி இது குடியரசுத் தலைவர் கையில் மட்டுமே உள்ளது. பந்து டெல்லிக்கு சென்றுவிட்டது. அவர் இதில் என்ன முடிவு எடுக்க போகிறார் என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும். நீட் விலக்கு தொடர்பான நமது போராட்டத்தின் அடுத்த கட்டமாக ஒன்றிய அரசை வலியுறுத்தி, இந்தச் சட்டமுன்வடிவிற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் நாம் அனைவரும் இணைந்து மேற்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கையை வைத்து அமர்கிறேன், என்று முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் கூறி உள்ள நிலையில், இனி குடியரசுத் தலைவரை சந்திக்க திமுக தலைவர்கள் முயற்சி எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+