இதுதான் அப்பாவு! ஆளுநரை பற்றி விமர்சிக்காதீங்க.. இது நமக்கு கருணாநிதி இட்ட கட்டளை.. அசத்தல் உத்தரவு
சென்னை: சட்டசபையில் இன்று ஆளுநரை தனிப்பட்ட ரீதியில் அவையில் விமர்சிக்க கூடாது, எக்காலத்திலும் ஆளுநரை பேரவையில் விமர்சனம் செய்யக் கூடாது என்று சபாநாயகர் அப்பாவு தனது உரையில் குறிப்பிட்டார்.
Recommended Video
தமிழக சட்டசபை சிறப்புக் கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவை தாக்கல் செய்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய நிலையில் மீண்டும் அவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரும் புதிய மசோதா மீது விவாதம் நடைபெற்று வருகிறது.

அப்பாவு உரை
இன்று சபாநாயகர் அப்பாவு தனது உரையில், இயன்ற அளவில் ஆளுநர் ஒருவர் மாநில அரசு இயற்றும் மசோதா மீது முயன்ற அளவு வேகமாக முடிவு எடுக்க வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தில் இப்படித்தான் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஆனால் தமிழ்நாடு அரசு இயற்றிய மசோதா மீது ஆளுநர் முடிவு எடுக்க காலதாமதம் செய்துள்ளார். 142 நாட்கள் கழித்து தமிழ்நாடு அரசின் மசோதாவை ஆளுநர் திருப்பி இருக்கிறார். இயன்ற அளவில் விரைவில் என்பதன் பொருள் இதுதானா?

தாமதமான முடிவு
ஆளுநரின் தாமதமான முடிவு வருத்தம் அளிக்கிறது. ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கையை ஒருதலைபட்சமாக அணுகியுள்ளார் ஆளுநர். அரசியல் சாசனப் பிரிவு 200-ன் கீழான அதிகாரத்தின் கீழ் ஆளுநர் திருப்பி அனுப்பினார். நீட் தேர்வு விலக்கு மசோதாவை சபாநாயகருக்கு திருப்பி அனுப்பிய கடிதத்தை பொதுவெளியில் வெளியிட்டது சரியான செயலாக கருதவில்லை.

அவமானம்
ஆளுநரின் கருத்துக்கள் உயர்மட்டக் குழுவின் அறிக்கையை அவமானப்படுத்தவது போன்று அமைந்துள்ளது. ஏகே ராஜன் அறிக்கையில் பல்வேறு அனுமானங்கள் உள்ளதாக கூறிய ஆளுனரின் கருத்து தவறானது. பேரவைக்கு அனுப்பட்ட கடிதத்தை பொது வெளியிட்டது ஜனநாயகத்தில் ஏற்படையதா என்பதை உரியவர்கள் யோசித்து பார்க்க வேண்டும். ஆளுநரை தனிப்பட்ட ரீதியில் அவையில் விமர்சிக்க கூடாது. எக்காலத்திலும் ஆளுநரை பேரவையில் விமர்சனம் செய்யக் கூடாது.

கருணாநிதி கொண்டு வந்த விதி
இது நமக்கு கலைஞர் இட்ட கட்டளை. அவர் கொண்டு வந்த விதியில் இருந்து பிசகாமல் நாம் செயல்பட வேண்டும். ஆளுநரை தனிப்பட்ட வகையில் விமர்சிக்காமல் அவை மாண்பை காப்பாற்றி வருகிறோம். தமிழ்நாடு சட்ட பேரவை விதி 92 (6-7) படி, குடியரசுத் தலைவர், ஆளுநர், நீதிமன்றத்தினை அவமதிக்கும் வகையில் குறித்து பேச கூடாது. இது ஏற்கனவே இருந்த விதி. தங்கள் கருத்துக்கு வலு சேர்க்க வேண்டும் என்பதற்காக இவர்களை இகழ்ந்து பேச கூடாது.

தவறாக பேசிய சம்பவங்கள்
ஆனால் இந்த சட்டத்தை சிலர் இடையில் நிறுத்தி வைத்து.. அவையிலேயே ஆளுநர் பற்றி தவறாக பேசிய சம்பவங்கள் வரலாற்றில் நடந்துள்ளன. ஆனால் அதன்பின் கருணாநிதி ஆட்சியில் எக்காலத்திலும் ஆளுநர் பற்றி அவையில் விமர்சிக்க கூடாது என்று கூறினார். இதற்கான விதியை அவர் மீண்டும் கொண்டு வந்தார். இதற்காக பேரவை விதிகள் குழு ஆலோசனை செய்து தமிழ்நாடு சட்ட பேரவை விதி 92 (6-7) கொண்டு வரப்பட்டது.

விதியை பின்பற்றுங்கள்
அதோடு இந்த விதியை நிறுத்தி வைக்க கூடாது என்றும் உத்தரவிட்டது. இந்த விதியை பின்பற்றி இன்று சட்டசபையில் எம்எல்ஏக்கள் ஆளுநரை தனிப்பட்ட ரீதியில் அவையில் விமர்சிக்காமல் மாண்புடன் பேச வேண்டும், நீட் விலக்கு மசோதா பற்றி மட்டுமே பேச வேண்டும். சட்ட ரீதியான விஷயங்களை மட்டுமே மாண்புடன் பேச வேண்டும் என்று சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications