சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"அரசே நடத்தும் கல்விக் கொலைகள்.." ஸ்டாலின் கடும் கண்டனம்.. சுபஸ்ரீ பெற்றோரிடம் ஆறுதல்

Google Oneindia Tamil News

சென்னை: நீட் தேர்வு குறித்த அச்சத்தால், மாணவி சுபஸ்ரீ தற்கொலை செய்த சம்பவம் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கோவை ஆர்எஸ்புரம் வெங்கடசாமி ரோட்டை சேர்ந்த ரவிச்சந்திரன் என்ற அரசு ஊழியரின் மகள் சுபஸ்ரீ (19). இவர் கடந்த வருடம் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெறவில்லை. இந்த வருடம் எப்படியும் பாஸாகிவிட வேண்டும் என்பதற்காக, தீவிரமாக படித்து வந்தார்.

Neet fear: MK Stalin has strongly condemned over student Subasree suicide

செப்டம்பர் மாதம் நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், தேர்வு அச்சத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்துவிட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"இதோ இன்னொரு அனிதா".. நீட் தேர்வில் ஃபெயிலாகி விடுவோமோ.. பயந்து பயந்தே.. தூக்கில் தொங்கிய கோவை மாணவி

இதுகுறித்து, திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு: #NEET குறித்தான அச்சத்தால் கோவையில் மாணவி சுபஶ்ரீ தற்கொலை செய்து கொண்டுள்ளார். அனிதாவில் தொடங்கிய மரணம் சுபஶ்ரீ வரை தொடர்கிறது. அரசே நடத்தும் கல்விக் கொலைகள் இவை!

Neet fear: MK Stalin has strongly condemned over student Subasree suicide

Recommended Video

    பிளஸ் 2 மாணவர்களே! நீட் தேர்வு இல்லாமல் மருத்துவ படிப்பு! சொல்கிறார் டாக்டர் தீபா

    சுபஶ்ரீயின் பெற்றோரிடம் பேசி ஆறுதல் கூறினேன். இந்த மரணத்துக்கு மத்திய- மாநில அரசுகள் பதில் சொல்லியாக வேண்டும்! கொரோனா காலத்திலும் மாணவர்கள் நலன் குறித்த கவலையின்றி நீட் தேர்வை நடத்த மத்திய அரசு துடிக்கிறது. எதிர்ப்பது போலக் காட்டிக் கொண்டு மத்திய அரசு செய்வதற்கெல்லாம் கைகட்டிக் கிடக்கிறது மாநில அரசு! இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    English summary
    DMK President MK Stalin has strongly condemned the government over the suicide of student Subasree due to fears over NEET exam.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X