நீட் மசோதா விவகாரம்....தமிழக எம்.பிக்கள் குழுவினரை சந்திக்க அமித்ஷா நேரம் ஒதுக்கவில்லை: டி.ஆர்.பாலு
சென்னை: நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கோரும் விவகாரத்தில் தமிழக எம்.பிக்கள் குழுவினரை சந்திக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இதுவரை நேரம் ஒதுக்கவில்லை என்று திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதா, தமிழக சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க கோரி ஆளுநரை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.

ஜனாதிபதி மாளிகையில்..
இந்நிலையில் நேற்று முன்தினம் டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில், நீட் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கோரி தமிழக அனைத்து கட்சி எம்.பிக்கள் குழு மனு கொடுத்தது. இக்குழுவில் திமுக, அதிமுக, இடதுசாரிகள், விசிக, காங்கிரஸ், முஸ்லிம் லீக் எம்.பிக்கள் இடம்பெற்றிருந்தனர். இதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து மனு தரவும் தமிழக எம்.பிக்கள் குழு திட்டமிட்டிருந்தது.

அமித்ஷா அலுவலகத்தில்..
தமிழக எம்.பிக்கள் குழுவினருக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒதுக்கி இருந்த நேரம் பின்னர் மாற்றி அமைக்கப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சகத்தில் தமிழக எம்.பிக்கள் குழுவினர் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மசோதாவுக்கு விரைவில் ஒப்புதல் கோரும் மனுவை கொடுத்தனர்.

நேரம் ஒதுக்காத அமித்ஷா
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, ஜனாதிபதி அலுவலகத்தில் நாங்கள் மனு கொடுத்த பின்னர் அது உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக எங்களுக்கு கடிதம் அனுப்பினர். உள்துறை அமைச்சர் அமித்ஷா முதலில் நேரம் ஒதுக்கி இருந்தார். பின்னர் இந்த நேரம் மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது.

அரசியல் சாசனப்படிதான் மசோதா
தற்போது வரை எங்களுக்கு மாற்றப்பட்ட நேரம் தெரிவிக்கப்படவில்லை. இது தொடர்பாக அமித்ஷாவின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். அரசியல் சாசன விதிகளின் படியே தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கு ஒப்புதல் தர வேண்டும். தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள், எம்.பிக்கள் அடங்கிய குழுதான் அமித்ஷாவிடம் நேரம் கேட்டிருக்கிறது. அதனால் சந்திக்க நிச்சயம் நேரம் ஒதுக்குவார். அமித்ஷாவைப் பொறுத்தவரை சிறப்பாக செயல்படக் கூடியவர். அவர் எங்களுக்கு நேரம் ஒதுக்கி தகவல் தெரிவிப்பார் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு டி.ஆர்.பாலு கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications