நாடு முழுவதும் NEET UG- நீட் நுழைவுத் தேர்வு- தமிழ்நாட்டில் 1.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு!
சென்னை: இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான (MBBS, BDS) நீட் NEET (UG) நுழைவுத் தேர்வு இன்று நடைபெற்றது. நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் முன்னதாக மிக கடுமையான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். சில இடங்களில் தேர்வு மையங்கள் குழப்பத்தால் மாணவர்கள் தத்தளித்தனர். நாடு முழுவதும் மொத்தம் 22 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் 1.5 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எழுதினர்.
நீட் நுழைவுத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை நடத்துகிறது. எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா-யுனானி- ஆயுர்வேதம் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு இந்த நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. நீட் நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும்.

நடப்பாண்டு நீட் நுழைவுத் தேர்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியது. இந்த நுழைவுத் தேர்வ நாடு முழுவதும் மொத்தம் 23 லட்சம் மாணவ, மாணவியரும் தமிழ்நாட்டில் மட்டும் 1.5 லட்சம் மாணவ, மாணவியரும் நீட் நுழைவுத் தேர்வை எழுத்இனர்.
தமிழ்நாட்டின் சென்னை, மதுரை, திருச்சி உட்பட மொத்தம் 31 நகரங்களில், நீட் நுழைவுத் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தமிழ்நாட்டின் தென்காசி, திருப்பத்தூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மட்டும் நீட் நுழைவுத் தேர்வு மையங்கள் அமைக்கப்படவில்லை.
நீட் தேர்வுகளுக்கு வழக்கம் போல இந்த ஆண்டும் கடும் உடை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மாணவர்கள், வெளிர்நிற அரை கை சட்டைகளைத்தான் அணிய வேண்டும். முழு கை சட்டைகளை அணியக் கூடாது. ஷீக்களை அணியவும் கூடாது. கை கடிகாரங்கள், கூலிங் கிளாஸ் போன்றவை அணியவும் தடை தடைவிதிக்கப்பட்டது.
மாணவியருக்கும் கடுமையான உடை கட்டுப்பாடு அறிவுறுத்தப்பட்டிருந்தது. முழுக்கை ஆடைகள், எம்பிராய்டரி ஆடைகளை மாணவிகள் அணியக் கூடாது; ஹேர்பின்கள், கிளிப்புகள், ஆடம்பர ஆபரணங்கள் அணியவும் கூடாது; காதணிகள், மூக்குத்திகள், வளையல்கள், மோதிரங்கள், கொலுசுகளும் அணியக் கூடாது. ஹை ஹீல்ஸ் காலணிகள், ஷூக்கள் போடவும் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
தேர்வு மையத்துக்குள் கால்குலேட்டர், செல்போன்கள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை கொண்டு செல்லக் கூடாது. சாப்பிடக் கூடிய பொருட்களையும் கொண்டு செல்லக் கூடாது.
நீட் நுழைவுத் தேர்வு எழுதும் மாண்வர்கள் முற்பகல் 11.30 மணி முதல் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். மாணவர்கள் அனைவரும் மிக கடுமையான சோதனைகளுக்குப் பின்னரே நீட் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். சில இடங்களில் தேர்வு மையக் குழப்பத்தால் மாணவர்கள் தத்தளித்தனர்.












Click it and Unblock the Notifications