அப்பாடா..! முத்துநகர் பயணிகளுக்கு சர்ப்ரைஸ் தந்த ரயில்வே.. போன வேகத்தில் திரும்பி வரும் நெல்லை ரயில்
சென்னை: பாலருவி எக்ஸ்பிரஸ் தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டதையடுத்து, திருநெல்வேலி - தூத்துக்குடி பயணிகள் ரயிலை ரயில்வே ரத்து செய்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் மீண்டும் தூத்துக்குடி - திருநெல்வேலி பயணிகள் ரயிலை இயக்க கோரி கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் தெற்கு ரயில்வே இதற்கு அனுமதி கொடுத்துள்ளது.
தென் மாவட்டங்களின் மிக முக்கிய நகரங்களாக நெல்லை - தூத்துக்குடி உள்ளன. தூத்துக்குடியில் விமான நிலையம், துறைமுகம், தொழில்சாலைகள் நிறைந்த பகுதியாக உள்ளது. இதனால், இந்த இரு நகரங்களுக்கு இடையே பயணிகள் அதிக அளவில் பயணிக்கிறார்கள். தினமும் பல ஆயிரக்கணக்கான பயணிகள் தொழில் நிமித்தமாகவும் பல்வேறு காரணங்களுக்காகவும் பயணம் செய்து வருகிறார்கள்.

நெல்லையில் இருந்து தூத்துக்குடிக்கு பேருந்துகள் அடிக்கடி இருந்தாலும் ரயில் வசதி அவ்வளவாக இல்லை. தூத்துக்குடி- நெல்லை இடையே பயணிகள் ரயில் தினமும் காலை, மாலை நேரங்களில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயிலை நாரைக்கிணறு, கைலாசபுரம், மணியாச்சி, ஒட்டநத்தம் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராம மக்கள், பள்ளி மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்லும் மக்கள் பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் தான், கடந்த மாதம் 15 ஆம் தேதி பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டது. இதனையடுத்து, தூத்துக்குடி - நெல்லை - தூத்துக்குடி ரயில் (வண்டி எண் 06688/06687) போதிய வருமானம் இல்லை என்று கூறி கடந்த மாதம் 19 ஆம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் இந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
இந்தநிலையில்தான் பயணிகள் கோரிக்கையை ஏற்ற ரயில்வே நிர்வாகம், தூத்துக்குடி - நெல்லை - தூத்துக்குடி பயணிகள் ரயில் மீண்டும் இயக்குவதற்கு ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்து உள்ளது. இது குறித்து ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தூத்துக்குடி -திருநெல்வேலி - தூத்துக்குடி பாசஞ்சர் ரயில் (வண்டி எண் 06688/06687) வரும் 9 ஆம் தேதி முதல் அடுத்த 6 மாதங்கள் ஞாயிற்றுக்கிழமை தவிர அனைத்து நாட்களிலும் வழக்கமான நேரங்களில் இயக்கப்படும். 6 மாதங்களுக்கு பின் இந்த ரயிலில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை பரிசீலிக்கப்பட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த ரயில் நெல்லையில் இருந்து காலை 7.35 மணிக்கு புறப்பட்டு தாழையூத்து, கங்கை கொண்டான், நாரைக்கிணறு, வாஞ்சி மணியாச்சி சந்திப்பு, கைலாசபுரம், தட்டப்பாரை, மீளவிட்டான், தூத்துக்குடி மேலுர் வழியாக தூத்துக்குடிக்கு காலை 9.20 மணிக்கு வந்து சேரும்.
மறுமார்கத்தில் தூத்துக்குடியில் இருந்து மாலை 6.25 மணிக்கு புறப்பட்டு நெல்லைக்கு இரவு 8.25 மணிக்கு சென்றடையும். பாலருவி எக்ஸ்பிரஸ் தூத்துக்குடியில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 11.25 மணிக்கு நெல்லை சென்றடைகிறது. பாலருவி ரயில் நீட்டிக்கப்பட்ட உடன் ரத்து செய்யப்பட்ட தூத்துக்குடி - நெல்லை ரயில் மீண்டும் இயக்கப்பட இருப்பது பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications