நியோமேக்ஸ் மோசடி.. சுற்றி வளைத்த போலீசார்.. மேலும் ஒரு இயக்குநர் அதிரடியாக கைது! திக்திக் சம்பவம்
சென்னை: அதிக லாபம் கொடுப்பதாகத் தென்மாவட்டங்களில் மக்களின் பணம் பெற்று மோசடி செய்ததாக நியோமேக்ஸ் நிறுவனத்தின் மீது பலரும் புகாரளித்துள்ளனர். இந்த விவகாரத்தில் ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்ட நிலையில், இப்போது நியோமேக்ஸின் துணை நிறுவனமான டிரிடஸ் இயக்குநர் மகாலிங்கம் கைது செய்யப்பட்டுள்ளது.
ஈஸியாகவும் சீக்கிரமாகவும் பணத்தைச் சம்பாதிக்க வேண்டும் வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். இந்த ஆசையைப் பயன்படுத்தி மக்களிடம் பணம் பறிக்கும் மோசடி சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

அப்படி தான் தென் மாவட்டங்களில் நியோமேக்ஸ் நிறுவனம் மோசடி செய்தது. மதுரையைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த நியோமேக்ஸ் நிறுவனம் அதிக லாபம் தருவதாகச் சொல்லி மோசடி செய்தனர். இந்த வழக்கில் ஏற்கனவே நியோமேக்ஸ் இயக்குநர் உட்படப் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது: இதற்கிடையே இப்போது நியோமேக்ஸின் துணை நிறுவனமான டிரிடஸ் இயக்குநர் மகாலிங்கம் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். ரூ 8 கோடி மோசடியில் ஈடுபட்டதாக நியோமேக்ஸ் துணை நிறுவனத்தின் இயக்குநர் மகாலிங்கம் கைது செய்யப்பட்டுள்ளார். பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி மனிஷா தலைமையிலான போலீசார் மகாலிங்கத்தை கைது செய்தனர்.
யார் இவர்: மதுரையைத் தலைமையிடமாகக் கொண்ட நியோமேக்ஸ் நிறுவனம் அதிக லாபம் தருவதாக மோசடி செய்த விவகாரத்தில் ஏற்கனவே அந்நிறுவன இயக்குநர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இப்போது மகாலிங்கமும் கைது செய்யப்பட்டுள்ளார்.
நியோமோக்ஸ் மோசடி: மதுரையைத் தலைமையிடமாகக் கொண்ட நியோமேக்ஸ் நிறுவனம் தமிழ்நாடு முழுக்க செயல்பட்டு வந்தது. பாளையங்கோட்டை, கோவில்பட்டி, திருச்சி, தஞ்சை எனப் பல மாவட்டங்களில் இதன் அலுவலகங்கள் செயல்பட்டன. இந்த நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால், மாதம் 12% முதல் 30% வரை வட்டி தருவதாகச் சொல்லி மக்களிடம் முதலீடுகளைப் பெற்றுள்ளனர்.
மேலும், இரண்டரை முதல் 3 ஆண்டுகளில் முதலீடு செய்த பணம் இரட்டிப்பாகத் தரப்படும் என்றும் ஆசை வார்த்தைகளைக் கூறி முதலீடுகளைப் பெற்றுள்ளனர். இதை நம்பி பலரும் பலர் பல கோடி முதலீடுகளைச் செய்தனர். ஆரம்பத்தில் சில காலம் பணத்தைக் கொடுத்தாலும், ஆனால் அதன் பிறகு யாருக்கும் சொன்னபடி பணத்தைத் தராமல் இந்த நியோமேக்ஸ் நிறுவனம் ஏமாற்றியுள்ளது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த பொதுமக்கள் ஒரு கட்டத்தில் போலீசில் புகார் அளித்தனர். அதன்படி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் ஏற்கனவே நியோமேக்ஸ் இயக்குநர்கள் கமலக்கண்ணன், வீரசக்தி, பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், இப்போது நியோமேக்ஸின் துணை நிறுவனர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications