டிரெண்டிங்காகும் 'மன்னிப்பு கேள் சீமான்'- 100 நாள் வேலை திட்ட விவகாரம்- கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
சென்னை: கிராமப்புறங்களில் செயல்படுத்தப்படும் 100 நாள் வேலை திட்டம் என்பது வெட்டி வேலை- அதை ஒழிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்த கருத்துக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ட்விட்டரில் 'மன்னிப்பு கேள் சீமான்' என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்காகி வருகிறது.
Recommended Video
விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சீமான் பிரசாரம் செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சீமான், வேளாண் சட்டத்தை எதிர்த்து நாங்கள் போராடுவோம். வேளாண் சட்டம், வேளாண் குடிகளுக்கு மட்டும் பாதிப்பு என்பது பைத்தியக்காரத்தனம். அது ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் எதிரானது. விவசாயத்தை வாழ வைக்க வேண்டும் என்றால் 100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்க வேண்டும். மனித ஆற்றலை உழைப்பில் ஈடுபடுத்தி, உற்பத்தியை பெருக்கி, லாபத்தை ஈட்டுகின்ற நாடு எதுவோ அதுதான் வாழும், வளரும் என்றார்.
மேலும் உழைப்பில் இலிருந்து மனிதனை வெளியேற்றிவிட்டு, சோம்பி இருக்க வைத்து கூலி கொடுப்பது என்பது மிக ஆபத்தான போக்கு. வேளாண்மை செய்வதற்கு ஆட்களே வரவில்லை எனும்போது, வேளாண்மைக்கு என எதற்காக தனி பட்ஜெட். அதனால் என்ன பயன் வரப்போகிறது? அது ஏமாற்று வேலை தானே. நூறு நாள் வேலை திட்டத்தால் என்ன பயன் இருக்கிறது. எத்தனை ஏரிகள் குளங்கள் தமிழ் நாட்டில் தூர் வாரப்பட்டுள்ளன என்றும் சீமான் கேள்வி எழுப்பினார்.

டிரெண்டிங் 'மன்னிப்பு கேள் சீமான்'
சீமானின் இந்த பேச்சு கடும் விமர்சனங்களுக்குள்ளாகி வருகிறது. ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் 'மன்னிப்பு கேள் சீமான்' என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்காகி வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி, விவசாயத்தைப் பற்றி, விவசாயிகளைப் பற்றி கவலைப்படுவதாகக் கூறும் நீங்கள், விவசாய நெருக்கடிக்கான அடிப்படைக் காரணங்களை, அவற்றை உருவாக்கும் ஒன்றிய பாஜக அரசின் கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கைகளை விமர்சிக்காமல், கிராமப்புற ஏழைகளுக்கு உதவும் 100 நாள் வேலையை குறி வைப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

காங். சசிகாந்த் செந்தில் கண்டனம்
காங்கிரஸ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரான முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் தமது ட்விட்டர் பக்கத்தில் சீமானுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சசிகாந்த் செந்தில் தமது பதிவில், 21 லட்ச ரூபாய் isuzu கார்ல சுத்திட்டு வாய வெச்சி மட்டுமே பிழைக்கிறவங்க சோம்பேறியா ? ஏழை விவசாயி சோம்பேறியா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். @NaveenFilmmaker, இலவச அரிசி, நூறு நாள் வேலை திட்டங்கள் மக்களை சோம்பேறிகள் ஆக்குகின்றன என சொல்வது ஒரு பூஷ்வா கேப்பிடலிஸ்ட் மைண்ட்செட். இவர்கள் ஒருமுறை KFCயில் செலவு செய்யும் பணத்தை உழைப்பவர்களுக்கு கொடுத்தால் இவர்களுக்கு கோபம் வருவது ஏன்? உழைக்கும் வர்க்கம் உழைக்காவிட்டால் இவர்கள் சொகுசு போய்விடும் என கொந்தளித்துள்ளார்.

கிராம மக்களுக்கு எதிரானது
@ViktorNavorskee என்ற நெட்டிசன், 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்த வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை. ஆனால் ஆர்.எஸ்.எஸ். அடிமைகள் 100 நாள் வேலைதிட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்கிறார்கள் என பதிவிட்டுள்ளார். @angry_birdu என்ற நெட்டிசன், ஒரு கிராமத்துக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை அரசு இரண்டு விதமாக செய்து கொடுக்கலாம் 1. தனியாருக்கு டெண்டர் விடுவது 2. அந்த கிராமத்தில் இருக்கும் மக்களை வைத்து அரசே செய்து கொடுப்பது. 100 நாள் வேலை உறுதி திட்டம் இரண்டாவது முறையை கையாள்கிறது. இந்த திட்டம் கூடாது என்பவர்கள் மறைமுகமாக சொல்ல வருவது, அந்த பணிகளை தனியாருக்கு டெண்டர் விட வேண்டும் என்பதுதான். 100 நாள் வேலை உறுதி திட்டம் வருவதற்கு முன்பு வரை அதுதான் நடந்து கொண்டிருந்தது என பதிவிட்டிருக்கிறார்.

100 நாள் வேலை திட்டத்தால் பயன்
@KarthickOcean என்ற பதிவர், என் ஊரில் எனக்கு நினைவு தெரிந்து இது முழுக்க முற்கள் நிறைந்து காணப்படும். 100 நாள் வேலை வாய்ப்பின் மூலம் இந்த ஏரி மீட்டு எடுக்க பட்டது. இன்று இதன் மூலம் சுற்றி உள்ள கிராமங்கள் பயன் அடைகிறது. இது போன்ற வளர்ச்சி தான் அவர்களுக்கு உறுத்தலாக உள்ளது என பதிவிட்டு அதற்கு ஆதாரமாக படங்களையும் வெளியிட்டுள்ளார். @DevaTRZ என்ற பதிவர், இது வறுமை ஒழிப்புத் திட்டம் இல்லை.. இது ஏழை மக்கள் வாழ்வை உறுதி செய்யும் உத்தரவாத திட்டம்.அவர்கள் உயிரை காப்பாற்றும் திட்டம். ஆரம்பத்தில்,அமெரிக்கா போல இலவசமாக மாதம் இவ்வளவு தொகை கொடுப்பது என முடிவு செய்து பின்னர் வேலை வாங்கி கொண்டு தருவது என முடிவு செய்தனர் என எழுதியுள்ளார்.

மக்களை கொச்சைப்படுத்துவதா?
Arivazhagan Kaivalyam என்கிற சமூக ஆர்வலர் தமது ஃபேஸ்புக் பக்கத்தில், சமூகப் பாதுகாப்பு என்ற பெயரில், நேரடியாக, இலவசமாக வழங்கினால் தன்மானத்துக்கு இழுக்கு என்று நினைப்பார்கள், பெயருக்கு ஒரு வேலைத்திட்டம் என்று சொல்லி அதன் மூலமாக வேலையில்லாமல் இருக்கிற நாட்களின் துயரைத் துடைக்கலாம் என்று கொண்டு வரப்பட்ட திட்டத்தை ஒழிக்கவும், அதில் செயல்படுகிற விளிம்பு நிலை மக்களை கொச்சைப் படுத்துவதற்கும் உனக்கு என்ன தகுதி இருக்கிறது மிஸ்டர் சீமான்? காலம் காலமாக இவர்களின் பணத்தையும், உழைப்பையும் சுரண்டித்தானே இங்கே பணக்காரன் உருவானான், அம்பானியும், அதானியும் இந்த தேசத்தின் உழைக்கும் மக்களின் பணத்தை சுரண்டித்தானே பில்லியனர் ஆனான். அரசு ஊழியர்களில் பாதிக்கும் மேலே இங்கே சும்மாதானே அமர்ந்து சம்பளம் வாங்குகிறான், ஏதுமில்லாதவன் பல்லாங்குழி ஆடினால் மட்டும் ஏன் உங்களுக்கு வலிக்கிறது? ஏதுமில்லாதவன் சீட்டு ஆடினால் மட்டும் உங்களுக்கு ஏன் ரத்தம் கொதிக்கிறது? சீமான் ஏழைகளைக் கொச்சைப் படுத்துவதை நிறுத்து, கலெக்சன் பணத்தை எண்ணினோமா, பட்டும் படாமல் ஏதாவது மேடைகளில் உளறினோமா என்று முடித்துக் கொள், அடிமடியில் கை வைத்தால் ஒட்ட நறுக்கி விடுவார்கள் என காட்டமாக பதிவிட்டுள்ளார்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications