சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

போப் ஆண்டவரை பல்லக்கில் தூக்குகிறார்களா? ட்விட் செய்த ஹெச்.ராஜா! கமெண்டில் கலாய்க்கும் நெட்டிசன்கள்!

Google Oneindia Tamil News

சென்னை : போப் ஆண்டவரை பல்லக்கில் தூக்கி செல்லும் நிலையில் தருமபுரம் ஆதினத்தை தூக்கிச் செல்ல கூடாதா என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா ட்விட்டரில் பதிவிட்டுள்ள நிலையில், போப்பை பல்லக்கில் தூக்கிச் செல்லும் பழக்கம் நிறுத்தப்பட்டு 40 வருடங்களுக்கு மேலாகி விட்டது என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீன திருமட ஆதீனகுரு முதல்வரின் குருபூஜை தினத்தன்று பட்டணப் பிரவேசம் நிகழ்ச்சியின் போது ஆதீன கர்த்தரை பல்லக்கில் அமர்த்தி அதனை பக்தர்கள் சுமந்து வீதியுலா செல்வது வழக்கம்.

இந்த வயசுலயா? 8ஆம் வகுப்பிலேயே 5 மாத கர்ப்பம்! பெற்றோர் முன் சிறுமி செய்த செயல்! மிரண்டு போன மதுரை.!இந்த வயசுலயா? 8ஆம் வகுப்பிலேயே 5 மாத கர்ப்பம்! பெற்றோர் முன் சிறுமி செய்த செயல்! மிரண்டு போன மதுரை.!

மனிதனை மனிதனே சுமப்பதா என திராவிடர் கழகம் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பட்டணப் பிரவேச நிகழ்வில் ஆதீனத்தை பல்லக்கில் அமர்த்தி பக்தர்கள் சுமந்து செல்ல தடைவிதித்து மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டார்.

பல்லக்கு விவகாரம்

பல்லக்கு விவகாரம்


இந்நிலையில் தருமபுர ஆதீன பட்டின பிரவேசம் நிகழ்ச்சியை தடை செய்திருப்பதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது எனவும், பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை தமிழக அரசு நீக்க வேண்டும் என்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தடையை மீறி பட்டின பிரவேச நிகழ்ச்சியை தமிழக பாஜக நடத்தும் எனவும், நானே பல்லக்கு தூக்குவேன் என கூறினார்.

ஹெச்.ராஜா கருத்து

ஹெச்.ராஜா கருத்து

மேலும் தருமபுர ஆதீனம் பட்டினப் பிரவேசத்தின்போது பல்லக்கில் தூக்கிச்செல்ல யார் தடை விதித்தாலும், தடையை மீறி இந்துக்கள் மதகடமையை நிச்சயம் செய்து முடிப்பர் என்று பாஜக மூத்த தலைவரும், முன்னாள் தேசிய செயலருமான ஹெச்.ராஜா கூறியிருந்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தருமபுரம் ஆதினம் பல்லக்கு நிகழ்ச்சியில் தேவை ஏற்படின் பல்லக்கில் தூக்கிச் செல்லுமிடத்தில் நான் இருப்பேன் என கூறினார்.

ட்விட்டர் கருத்து

ட்விட்டர் கருத்து

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பல்லாக்கை நானே தூக்கிச் செல்வேன் என கூறி நிலையில் பல்லக்கு தூக்கும் இடத்தில் நான் இருப்பேன் என ஹெச். ராஜா கூறியதாக பலரும் விமர்சித்து வந்தனர். இந்த நிலையில்தான் மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார் ஹெச். ராஜா. தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய வார்த்தைகளைப் பயன்படுத்தி பதிவிட்டுள்ள அவர், "கிறிஸ்தவ முறைப்படி பல்லக்கில் உலா வரும் போப், என ஒரு புகைப்படத்தை பதிவிட்டு அவர்களோட மத நம்பிக்கையில் தலையிடக்கூடாது என கூறும் திராவிடர்கள், ஆதீனத்தை பல்லக்கில் வைத்து மனிதர்கள் தூக்குவது இந்து மதத்தில் கொடுமை எல்லாம் நடக்கிறது மூடநம்பிக்கை இத நாங்க விடவே மாட்டோம்" எனக் கூறுவது போல பதிவிட்டுள்ளார்.

பலரும் விமர்சனம்

பலரும் விமர்சனம்

ஆனால் உண்மை என்னவெனில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பே இந்த வழக்கம் நிறுத்தப்பட்டுவிட்டது. இதனையடுத்து ட்விட்டரில் பலரும் ஹெச்.ராஜாவை விமர்சித்து வருகின்றனர். "போப் கார்ல போகும் பழக்கம் ஆரம்பிச்சி நாற்பது வருசத்துக்கு மேலாச்சு..தானே தூக்கி சுமக்கிறார்கள் அவர்களை பிற்போக்காளர்கள் என்று சொல்வீர்களா. அரசியல் தலைவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.கூடவே ஐம்பது வருசத்துக்கு முந்தைய போப் ஒருவரின் புகைப்படம் ஒன்றை போட்டு பெரிய ஆதாரம் இது என காட்டுவதா? " என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

English summary
BJP senior leader H Raja has tweeted that Dharmapuram Adheenam should not be lifted in Pallaku while the pope is being hanged on a Pallaku . Many people are commenting that the practice of lifting the pope on the Pallaku has been stopped for more than 40 years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X