அம்பேத்கர் பிறந்த நாளன்று அறிக்கைவிட்டது குத்தமா? கி.வீரமணியிடம் சரமாரியாக கேள்வி கேட்ட நெட்டிசன்ஸ்!
சென்னை: அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளில் திராவிடர் கழகம் யார் பக்கம் நின்றது என நெட்டிசன்கள் சரமாரியாக கி.வீரமணியிடம் கேள்வி எழுப்ப அவரது ஃபேஸ்புக் பக்கமே தகிக்கிறது.
கி.வீரமணி இன்று வெளியிட்ட அறிக்கை: சமத்துவத்திற்கான வாழ்நாள் போராளியாக, தன் னுடைய சிந்தனை, செயல் அனைத்தையும் உலகத்திற்கு அர்ப்பணித்து வாழ்ந்து, ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்தின் வடிவமாகவே ஆகிவிட்ட புரட்சியாளர் பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 133ஆம் ஆண்டு பிறந்தநாள் (14.04.2023) அன்று அவரது படத்திற்கும், சிலைக்கும் மாலை போடுவது மட்டும் போதாது! அவரது சீலத்தை (கொள்கையை) நடை முறைப்படுத்த நமது பங்களிப்பு என்ன என்று ஒவ்வொரு அம்பேத்கரிஸ்டும், பெரியாரிஸ்டும், சமூகநீதிப் போராளி களும் சிந்தித்துச் செயலாற்ற முன்வருவதே அவருக்கு நாம் சூட்டும் உண்மையான மலர் மாலையாகும்.

"அரசியலில் சமத்துவம் வந்துள்ளதே தவிர, சமூகத் திலும் பொருளாதாரத்திலும் எந்த விதமான சமத்துவமும் நிலவவில்லை என்பது வேதனையான ஒன்று" என்ற அவருடைய வாழ்நாள் வேதனை நம்முடைய காலத்தில் மாற்றப்பட வேண்டும் என்ற உறுதியை நாம் ஒவ்வொருவரும் எடுத்துக் கொள்ள வேண்டும். தந்தை பெரியாரின் பிறந்தநாளை சமூகநீதி நாளாக அறிவித்த திராவிட மாடல் ஆட்சியின் ஒப்பற்ற முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளையும் சமத்துவ நாளாக அறிவித்துத் தனி சரித்திரம் படைத்துள்ளார்.
ஜாதி தீண்டாமைப் பாம்பு இன்னமும் நம் நாட்டுக் கருவறைகளில் பாதுகாப்பாகப் படமெடுத்து ஆடிக் கொண்டிருக்கிறது. சட்டத்தின் மூலம் அதை இந்த ஆட்சியிலே தடுக்க முயன்றாலும், வேறு இடங்களில் இடம்பெற்றுள்ள ஆரிய நச்சரவங்களால் இன்னமும் பாதுகாக்கப்பட 'பகீரதப் பிரயத்தனங்கள்' செய்யப்படுவதால், அதை முறியடிக்கச் சூளுரைத்துக் களமாட வேண்டிய கடமை, சமத்துவ, சமூகநீதிப் போராளிகளுக்கும், அனைத்து முற்போக்கு சக்திகளுக்கும் உண்டு. இதுவே அவரது பிறந்தநாளில் நாம் எடுக்கும் சூளுரையாகும். இவ்வாறு கி.வீரமணி கூறியிருந்தார்.

கி.வீரமணிக்கு Sakthivel Gounder என்ற நெட்டிசன் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் சரமாரியாக எழுப்பிய கேள்விகள்: 1. கீழவெண்மணி பிரச்னையில் ..ஒடுக்கப் பட்டவர் யார் ? திராவிடம் யார் பின்னால் நின்றது.?
2. சிறு கேபிள் டிவி ஆபரேட்டர்களை சுமங்கலி கேபிள் விஷன் ஒழித்த பிரச்னையில்..ஒடுக்கப் பட்டவர் யார் ? திராவிடம் யார் பின்னால் நின்றது.?
3. உத்தப் புரம் தீண்டாமை சுவர் பிரச்னையில்...ஒடுக்கப் பட்டவர் யார் ? திராவிடம் யார் பின்னால் நின்றது.?
4. கொடியங்குளம், மாஞ்சோலை பிரச்னைகளில்...ஒடுக்கப் பட்டவர் யார் ? திராவிடம் யார் பின்னால் நின்றது.?
5. வாச்சாத்தி பயங்கரத்தில்..ஒடுக்கப் பட்டவர் யார் ? திராவிடம் யார் பின்னால் நின்றது.?
6. சேலத்தில் ஒரு இன்ஸ்பெக்டர் குடும்பமே கொல்லப்பட்ட விஷயத்தில்......ஒடுக்கப் பட்டவர் யார் ? திராவிடம் யார்
பின்னால் நின்றது.?
7. அண்ணாமலை பல்கலைக்கழக உதயகுமார் மர்மச் சாவில்....ஒடுக்கப் பட்டவர் யார் ? திராவிடம் யார் பின்னால் நின்றது.?
8. வேங்கை வயல் பிரச்னையில்...ஒடுக்கப் பட்டவர் யார் ? திராவிடம் யார் பின்னால் நின்றது.?
9. பெருந்துறையில் பெரியசாமி சிவபாலன் வீட்டை இடித்த பிரச்னையில்.....ஒடுக்கப் பட்டவர் யார் ? திராவிடம் யார் பின்னால் நின்றது.?
10. மதுரை தினகரன் ஊழியர் எரிக்கப்பட்டு இறந்த சம்பவத்தில்.....ஒடுக்கப் பட்டவர் யார் ? திராவிடம் யார் பின்னால் நின்றது.?
11. இலங்கையில் தமிழர்கள் இன அழிப்பு செய்யப் பட்டபோது .....ஒடுக்கப் பட்டவர் யார் ? திராவிடம் யார் பின்னால் நின்றது.? இப்படியாக சரமாரியான கேள்விகளை வீசியுள்ளார் அந்த நெட்டிசன்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications