மத்திய அரசு தடை செய்த ஹரிஜன் சொல்லை ஆளுநர் ரவி பாணியில் பயன்படுத்திய எச்.ராஜா- வலுக்கும் கண்டனங்கள்!
சென்னை: மத்திய அரசு தடை செய்த ஹரிஜன் என்ற சொல்லை ஆளுநர் ஆர்.என்.ரவி பயன்படுத்திய சர்ச்சை ஓயவில்லை. தற்போது மூத்த பாஜக தலைவர் எச்.ராஜா ஹரிஜன் என்ற சொல்லுடன் ட்விட்டரில் பதிவிட்டிருப்பது சர்ச்சையாகி உள்ளது.
சென்னையில் கடந்த 15-ந் தேதி சர்வோதயா பள்ளி மாணவியர் விடுதி திறப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, பட்டியல் இன மக்களை ஹரிஜன் என்ற சொல்லில் அழைத்தார். தமிழ்நாட்டில் உயர்கல்வியில் சேரும் ஹரிஜன்கள் 13% அல்லது 14% இருக்கின்றனர் என குறிப்பிட்டிருந்தார். இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

திருமாவளவன் கண்டனம்
இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டிருந்த அறிக்கையில், அப்பன் பெயர் தெரியாதவர்கள் என்னும் பொருளைத் தருவதால் பட்டியல் சமூகத்தினரை இழிவுபடுத்தக் கூடியதாகும் ஹரிஜன் என்ற சொல்லுக்கு அந்தக் காலத்திலேயே கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இந்த வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என மத்திய அரசு 1982-ம் ஆண்டு ஆணையிட்டிருக்கிறது என சுட்டிக்காட்டி இருந்தார்.

விளக்கம் கேட்ட திருமாவளவன்
அத்துடன் மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்கும் ஆளுநர் இவ்வாறு பொதுவெளியில் அதுவும் மாணவர்களிடையே ஹரிஜன் என்ற சொல்லைப் பயன்படுத்திப் பேசியிருப்பது சரியானதுதானா என அவர் சிந்திக்க வேண்டும். அவரைப் பின்பற்றி வேறு யாரும் அந்தச் சொல்லை பயன்படுத்தாமல் இருக்க அவர் உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் எனவும் தொல். திருமாவளவன் கூறியிருந்தார்.

தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார்
மேலும் ஹரிஜன் என்ற சொல்லை ஆளுநர் ஆர்.என்.ரவி பயன்படுத்தியதால் அவர் மீது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திலும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. தலித் விடுதலை இயக்கத்தின் தலைவர் ச.கருப்பையா அனுப்பியிருக்கும் புகார் மனுவில், ஹரிஜன் என்ற சொல்லை பயன்படுத்த 1982-ல் மத்திய அரசு தடை விதித்துவிட்டது. 2012-ம் ஆண்டும் மத்திய அரசு ஹரிஜன் என்ற சொல்லை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டது. ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி தடை செய்யப்பட்ட ஹரிஜன் என்ற சொல்லை பயன்படுத்தி இருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

ஹரிஜன் என்ற சொல்லுடன் எச்.ராஜா ட்வீட்- கண்டனங்கள்
இந்நிலையில் மூத்த பாஜக தலைவர் எச்.ராஜா தமது ட்விட்டர் பக்கத்தில், ஆங்கிலேயரை எதிர்த்து நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்திற்கு தமிழகத்திலிருந்து பெரும் படையை திரட்டி அனுப்பியவர். மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்துக்குள் ஹரிஜன மக்களை அழைத்துச் செல்ல வைத்தியநாதய்யர் முடிவு செய்தபோது அதை ஏற்று ஹரிஜன மக்களை அழைத்து வரும்போது அடியேனும் உடன் வருவேன்; ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அந்த ரவுடிக் கும்பலை சந்திக்க வேண்டிய முறையில் சந்திப்பேன் என ஒரு துண்டு பிரசுரம் மூலம் தெரிவித்து ஆலய பிரவேசத்தினை அமைதியாக நடத்திய பெரியவர் திரு.பசும்பொன் உ.முத்துராமலிங்க தேவர் அவர்களின் தியாகத்தையும் சேவையும் வீரத்தையும் போற்றுவோம் என தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பதிவிட்டுள்ளார். எச்.ரஜாவின் இந்த ட்விட்டர் பக்கத்திலேயே ஹரிஜன் என்ற தடை செய்யப்பட்ட சொல்லை பயன்படுத்தியதற்கு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications