பட்டா மாறுதலில் மாற்றம்! சொத்துக்களுக்கு சர்வே எண்.. நில அளவை வரைபடம்.. அசத்தும் தமிழக வருவாய்த்துறை
சென்னை: சொத்துக்களுக்கு சர்வே எண், உட்பிரிவு எண் அடிப்படையில், முந்தைய பத்திரப்பதிவு விபரங்கள், வில்லங்க சான்றாக பதிவுத்துறையில் வழங்கப்படுகிறது. அதுபோலவே வருவாய்த்துறையிலும் ஒரு புதிய வசதி கொண்டுவரப்படுகிறது. இது தொடர்பான ஒரு தகவல் கசிந்து வருகிறது.
வீடு, மனை போன்ற சொத்துக்களை வாங்கும்போது, அதற்கான பத்திரத்தை சரி பார்ப்பதுடன், பட்டாவையும் ஆய்வு செய்ய வேண்டும். பத்திரப்பதிவு, கட்டட அனுமதி போன்ற பல்வேறு பணிகளின் போது, சம்பந்தப்பட்ட சொத்துக்கான பட்டா சரியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

முன்பெல்லாம் பட்டா வாங்க வேண்டுமானால் வட்டாட்சியர் ஆபீசுக்கு அலைய வேண்டியிருக்கும்.. ஆனால், இப்போது ஆன்லைனிலேயே பட்டா வாங்க முடியும். இதற்கெனவே உருவாக்கப்பட்டுள்ளதுதான் தமிழ் நிலம் அதாவது, https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற ஸ்பெஷல் வெப்சைட் உருவாக்கப்பட்டுள்ளது.
பட்டா மாற்றம்: ஒருவரின் பெயருக்கு சொத்து பதிவு செய்யப்படும்போது, வருவாய் துறை மூலமாக, பட்டாவும் பெயர் மாற்றம் செய்ய தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருக்கிறது.
அதேபோல, பழைய பத்திரத்தில் பெயர் மாற்றம் செய்யாதவர்கள், ஏற்கனவே பத்திரப்பதிவு செய்தவர்களும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இடம் அல்லது வீடு வாங்குவோரும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். எந்த நிலத்திற்கு பட்டா மாற்றம் செய்ய வேண்டுமோ, அது உட்பிரிவற்ற பட்டா மாற்றமா அல்லது உட்பிரிவுடன் பட்டா மாற்றமா என்பதை அறிந்து, அதனையும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
முந்தைய மாற்றங்கள்: இந்நிலையில், சொத்துக்களின் பட்டா தொடர்பான முந்தைய மாற்றங்களை அறிந்து கொள்வதற்கான புதிய வசதியை, வருவாய் துறை விரைவில் அறிமுகம் செய்ய போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
அதாவது, ஒரு சொத்துக்கான பட்டா, யார் பெயரில் உள்ளது என்று மட்டுமே இப்போது பொதுமக்கள் பார்க்கின்றனர். வருவாய் துறையில் பட்டா, நில அளவை வரைபடம் போன்றவற்றை, ஆன்லைன் வழியே, மக்கள் பார்வையிட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில், மாவட்டம், தாலுகா, கிராமம், சர்வே எண், உட்பிரிவு எண் போன்ற விபரங்களை அளித்தால், கடைசியாக வழங்கப்பட்ட பட்டா தொடர்பான விபரங்கள் மட்டுமே கிடைக்கும்.
புதிய வழிமுறை: அந்த குறிப்பிட்ட சர்வே எண்ணில், இதற்கு முன்பு வழங்கப்பட்ட பட்டாக்கள் தொடர்பான விபரங்கள் தெரியவந்தால், சொத்து அபகரிப்பு போன்ற மோசடிகளை தடுக்க முடியும் என்பதால்தான், இதற்கு தீர்வாக புதிய வழிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.
சொத்துக்களுக்கு சர்வே எண், உட்பிரிவு எண் அடிப்படையில், முந்தைய பத்திரப்பதிவு விபரங்கள், வில்லங்க சான்றாக பதிவுத்துறையில் வழங்கப்படுவதை போல, முந்தைய பட்டா மாறுதல் விபரங்களை அறிக்கையாக மக்களுக்கு வழங்க, வருவாய் துறை முடிவு செய்துள்ளதாம்.
வில்லங்க சான்றிதழ்: அதுமட்டுமல்ல, ஆன்லைன் முறையில் ஒருங்கிணைந்த பட்டா பரிமாற்ற பதிவேடு விபரங்கள், மக்களுக்கு விரைவில் கிடைப்பதற்கான நடவடிக்கை எடுத்து வருவதாக வருவாய் துறை உயர் அதிகாரிகள் தரப்பிலும் சொல்லப்படுகிறது...!
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications