இனி குற்றவாளிகள் ஈஸியா தப்ப முடியாது.. மாஸ் காட்டும் சென்னை காவல்துறை.. அதிநவீன கார்கள்! வேற லெவல்
சென்னை: சமீப காலங்களாக காவல்துறையின் கட்டமைப்புகள் நவீனமயமாக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சென்னை மாநகர காவல்துறைக்கு புதிய வாகனங்கள் பெறப்பட்டிருக்கின்றன.
தேசிய அளவில் அதிக மக்கள் கொண்ட நகரங்களின் பட்டியலில் 5 வது இடத்தில் சென்னை இருக்கிறது. ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் இங்கு வசித்து வருகின்றனர். மட்டுமல்லாது ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வேலைக்காக தினமும் வந்து செல்கின்றனர். எனவே குற்றங்களும் அதிக அளவு நடக்கின்றன. இதனை கட்டுப்படுத்தும் பணியில் பெருநகர காவல்துறையினர் சிறப்பாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நாட்டின் மிகவும் பாதுகாப்பான நகரங்களின் பட்டியலில் சென்னை முதல் இடத்தில் இருக்கிறது.

நாட்டில் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நகரம் எது? என சமீபத்தில், பன்முகத்தன்மை ஆலோசனை நிறுவனமான அவதார் குழுமம், ஆய்வை மேற்கொண்டிருந்தது. அதில் சென்னைதான் பாதுகாப்பான நகரம் என்பது தெரிய வந்திருக்கிறது. தென்னிந்தியாவின் சிலிக்கான் வேலி என்று அழைக்கப்படும் பெங்களுரை விட சென்னைதான் பாதுகாப்பானதாக இருக்கிறது.
இதற்கு காவல்துறையினரின் உழைப்புதான் முழு காரணம். எனவே காவலர்களின் பணியை எளிமையாக்கும் விதமாக, சென்னை காவல்துறை நவீனமயப்படுத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது புதியதாக 53 கார்கள் வாங்கப்பட்டுள்ளன. இதில் 25 ஹூண்டாய் கிரெட்டா கார்களும் அடங்கும். தமிழக காவல்துறைக்கு என ஹூண்டாய் கிரெட்டா ரக கார்கள் வாங்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
குற்றவாளிகளை துரத்தி பிடிக்கவும், உடனடியான செயல்பாட்டுக்கும் இந்த கார்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது எஸ்யுவி ரகத்தை சேர்ந்ததாக இருந்தாலும், வேகத்தில் மாஸ் காட்டும். இதன் அதிகபட்ச வேகம் 195 கி.மீ. 1497 சிசி திறன் கொண்ட என்ஜின் 113.18 குதிரை திறனை உற்பத்தி செய்கிறது. எனவே காவல்துறையினர் சேஸிங்கில் இருந்து குற்றவாளிகள் எளிதில் தப்பிக்க முடியாது.

கிரெட்டா தவிர, எட்டு இன்னோவா கிறிஸ்டா கார்கள், 20 பொலிரோ ஜீப்புகள் என மொத்தம் ரூ.6.50 கோடியில் 53 புதிய வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.
போலீஸ் துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், சட்டம் -ஒழுங்கு, குற்றப்பிரிவு மற்றும் சிறப்புப் பிரிவு காவல் ஆய்வாளர்களுக்கு இந்த கார்கள் பயன்பாட்டுக்கு வழங்கப்படும். இவற்றை தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து காவல்துறை பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார்.












Click it and Unblock the Notifications