பொது வருங்கால வைப்பு நிதி.. பிபிஎஃப் -ல் புதிய வட்டி.. ரிஸ்க் இல்லாத முதலீடு.. தமிழக அரசு குட்நியூஸ்
சென்னை: பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்பது தற்போது 7.1 சதவீத வட்டி விகிதத்தை வழங்கும் ஒரு சிறந்த சிறு சேமிப்புத் திட்டமாகும். சம்பளம் பெறுபவர்கள், சுயதொழில் செய்பவர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் என இந்தியாவில் வசிக்கும் அனைவருமே முதலீடு செய்ய இந்த திட்டம் அனுமதிக்கிறது. இந்நிலையில், அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரைக்கான பொது வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம் அறிவிக்கப்பட்டுள்ளது.
EPFO என்று சொல்லப்படும் பிஎஃப், ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களின் மாத சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்யப்படும் குறிப்பிட்ட தொகையாகும்.
அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, பிஎஃப் கணக்குகள் கட்டாயம் நடைமுறையில் இருந்து வருகின்றன.. இந்த முறைப்படி 12% வரை ஒவ்வொரு மாதமும் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பணம் பிடித்தம் செய்யப்படுகிறது.

பிஎஃப் ஓய்வூதியம்
ஊழியர்கள் பணியில் இருக்கும்வரை இந்த பிஎப் கணக்கும் அமலில் இருக்கும். ஊழியர்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, இந்த பணத்தை மீண்டும் திரும்ப எடுத்துக்கொள்ளலாம்.
அதேசமயம், மருத்துவ தேவை, திருமணம் மற்றும் வீடு கட்டுதல் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டுமே பிஎஃப் தொகையை எடுக்க முடியும். அதிலும் ஒரு குறிப்பிட்ட அளவில் மட்டுமே பணத்தை எடுக்க விதிமுறைகள் வழிவகுக்கின்றன.
இப்படிப்பட்ட சூழலில், பணியாளர்கள் இனிமேல் முழு பணத்தையும் எடுத்துக் கொள்ளலாம் என்று தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில் கடந்த வாரம் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு மாதச் சம்பளம் வாங்குவோர் மத்தியில் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
மத்திய அரசு சூப்பர் செய்தி
இதுகுறித்து மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா சொல்லும்போது, வருங்கால வைப்புநிதி தொகையில் பகுதி அளவு எடுப்பதற்கான விதிமுறைகள் தற்போது எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. தேவைக்கான காரணங்களும் 13ல் இருந்து 3 ஆக, அதாவது அத்தியாவசியம், வீட்டுத் தேவை மற்றும் சிறப்பு சூழ்நிலை என்று 3 வகைகளாக குறைக்கப்பட்டுள்ளன.
இந்த விதிகளின் மூலம் பணியாளர் பங்களிப்பு மற்றும் நிறுவனத்தின் பங்களிப்பு உள்பட பிஎஃப் கணக்கில் உள்ள இருப்புத் தொகையில் 100% வரை எடுத்துக் கொள்ளலாம்.
கல்வி மற்றும் திருமணம் செலவுக்காக பணத்தை திரும்ப பெறுவதற்கான வரம்புகளும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அதாவது கல்வி தேவைக்காக 3 முறைக்கு பதிலாக 10 முறையும், திருமண தேவைக்காக 3 முறைக்கு பதிலாக 5 முறையும் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
பிஎப் பணம் - மாத சம்பளம்
வேலையின்மை, தொற்று நோய் பரவல், வேலை செய்த நிறுவனம் திடீரென மூடப்படுதல் மற்றும் இயற்கை சீற்றம் உள்ளிட்ட சிறப்பு சூழ்நிலைகளில் காரணம் எதுவும் தெரிவிக்காமல் பிஎஃப் பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என்றெல்லாம் கூறியிருந்தது, மிகுந்த மகிழ்ச்சியை மாத சம்பளம் பெறுவோர் மத்தியில் ஏற்படுத்திவிட்டது.
இந்நிலையில், பொது வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம் வெளியாகியிருக்கிறது..தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பொது வருங்கால வைப்புநிதி (ஜிபிஎஃப்) தொகைக்கு கடந்த நிதியாண்டில், ஒவ்வொரு காலாண்டிலும் 7.1 சதவீத வட்டி வழங்கப்பட்டது.
பொது வருங்கால வைப்பு நிதி
பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்பது இந்திய அரசாங்கத்தால் நடத்தப்படும் ஒரு சிறு சேமிப்பு மற்றும் வரி சேமிப்புத் திட்டமாகும். இது நீண்ட காலத்திற்கு முதலீடு செய்து, கவர்ச்சிகரமான வட்டி விகிதத்தை பெற பேருதவி செய்கிறது.
இந்த PPF கணக்கை திறப்பதன் மூலம், தனிநபர்கள் தங்கள் வருங்காலத்திற்கான சேமிப்பை தொடங்கலாம் மற்றும் வரிச்சலுகைகளையும் பெறலாம். PPF கணக்கின் மூலம் வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் வரிச் சலுகைகளையும் பெறலாம். அந்தவகையில், பொது வருங்கால வைப்பு நிதிக்கு, 7.1 சதவீத வட்டி நிர்ணயம் செய்து, தமிழக அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது.
உதயச்சந்திரன் - அரசாணை
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட உத்தரவில், "தமிழகத்தில் பொது வருங்கால வைப்பு நிதியாக, சந்தாதாரர்கள் செலுத்திய தொகைக்கு, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வட்டி நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில், கடந்த ஏப்ரல் முதல், 7.1 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
தற்போது, மத்திய அரசின் தீர்மானத்தின்படி, அக்., 1 முதல் டிச., 31 வரை, பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் அதேபோன்ற பிற வைப்பு நிதிகளில், சந்தாதாரர்கள் செலுத்திய தொகைக்கு, 7.1 சதவீதம் வட்டி கணக்கிடப்படும்" என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான அரசாணையை நிதித்துறை செயலர் உதயச்சந்திரன் வெளியிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications