Tambaram: தாம்பரம் ரயில் நிலையத்தில் புதிய Over Bridge! எப்போது திறப்பு? என்னென்ன வசதிகள் தெரியுமா?
தாம்பரம்: சென்னை புறநகர் மக்களின் முக்கிய போக்குவரத்து மையமாகத் திகழும் தாம்பரம் (Tambaram) ரயில் நிலையத்தில், பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், நவீன வசதிகளுடன் கூடிய புதிய நடைமேம்பாலம் (New Foot Over Bridge) மார்ச் மாதம் திறக்கப்படவுள்ளது.
இதுகுறித்து ரயில் தகவல் எனும் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: சென்னை சென்ட்ரல், எழும்பூருக்கு அடுத்தபடியாக மூன்றாவது ரயில் முனையமாக #தாம்பரம் அறிவிக்கப்பட்ட பிறகு, இங்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது.

இதனால் தற்போதுள்ள நடைமேம்பாலத்தில் கடும் நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்க, இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
பாலத்தின் சிறப்பம்சங்கள் என்ன?
சுமார் ₹24 கோடி மதிப்பீட்டில் மிகப்பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டு வரும் இந்தப் பாலத்தில், பயணிகளை ஆச்சரியப்படுத்தும் வகையில் பல நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
விசாலமான பாலம்: இந்தப் புதிய நடைமேம்பாலம் 8 மீட்டர் அகலம் கொண்டதாக அமைகிறது. இதனால் கூட்ட நெரிசலின்றிப் பயணிகள் வசதியாகச் செல்ல முடியும்.
எஸ்கலேட்டர் வசதி: முதியவர்கள் மற்றும் நோயாளிகள் சிரமமின்றி ஏறிச் செல்ல, 10 நகரும் படிக்கட்டுகள் (Escalators) அமைக்கப்படவுள்ளன.
லிஃப்ட் வசதி: இதுதவிர, கனமான உடைமைகளுடன் வரும் பயணிகளுக்காக 9 லிஃப்டுகளும் (Lifts) பொருத்தப்படவுள்ளன.
இணைப்பு: இந்தப் பாலம் ரயில் நிலையத்தின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளை நேரடியாக இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் திறப்பு!
தற்போது இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. திட்டமிட்டபடி அனைத்துப் பணிகளும் முடிவடைந்து, வரும் மார்ச் மாதம் (March 2026) இந்தப் பாலம் பயணிகளின் பயன்பாட்டிற்குத் திறக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
நீண்ட தூர ரயில்களில் செல்லும் பயணிகள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இந்தப் புதிய பாலம் ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமேம்பாலத்தால் அனைத்து ரயில் நடைமேடைகளுக்கும் பயணிகள் எளிதாகவும் விரைவாகவும் செல்ல வழி பிறக்கும். படிக்கட்டுகளைப் பயன்படுத்தும் சிரமம் குறைவதால், வயதானோர், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகளுடன் பயணிப்போர் பெரிதும் பலன் பெறுவர். மேலும், தற்போதுள்ள நடைமேம்பாலத்தில் ஏற்படும் நெரிசல் குறையும். ரயில் நிலையத்தின் இருபுற பகுதிகளையும் சிரமமின்றி கடக்க இது வசதி அளிக்கும்.
ரயில் நிலையத்தில் தற்போதுள்ள நடைமேம்பாலம் பயணிகளுக்குப் போதுமான வசதிகளை வழங்குவதில்லை. கிழக்கு மற்றும் மேற்குப் பக்க நுழைவாயில்களில் மட்டுமே லிஃப்ட் உள்ளதால், மற்ற நடைமேடைகளுக்கும், வாகன நிறுத்துமிடங்களுக்கும் செல்லப் பயணிகள் படிக்கட்டுகளையே பயன்படுத்த வேண்டியுள்ளது. இது வயதானவர்கள், குழந்தைகளுடன் பயணிப்போர் உள்ளிட்ட அனைவருக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. இந்தச் சிரமங்களைப் போக்க புதிய நடைமேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications