அரசு ஊழியர்களுக்கு லாட்டரி அடிச்ச மாதிரி பென்ஷனா? ஓய்வுக்கு பிறகும் மாத சம்பளம் வருமா? உண்மை என்ன
சென்னை: திமுக அரசு தற்போது அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டம் இரண்டுமே பொதுமக்களின் கவனத்தை பெற்று வருகிறது.. இந்த 2 திட்டங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் தங்களது விமர்சனங்களையும், கருத்துக்களையும் விடாமல் முன்வைத்து வருகிறது.. அந்தவகையில், புதிய ஓய்வூதிய திட்டம் குறித்து தமிழக பாஜக முக்கிய குற்றச்சாட்டை தமிழக அரசு மீது தெரிவித்துள்ளது... அது என்ன?
தமிழகத்தின் அரசு திட்டங்களில் மற்றும் மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கிய மக்கள் நல திட்டங்களில் ஊழல் செய்வது போல், தமிழக மக்களுக்கு கொடுக்க வேண்டிய பொங்கல் பரிசு பணத்தையும் நான்கு ஆண்டுகளாக ஏமாற்றும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டது வருந்தத்தக்கது.

எனவே தமிழக முதல்வர் ஸ்டாலின் தாயுள்ளத்துடன் 2026 பொங்கல் பரிசு தொகை ரூ.3000 மற்றும் 4 வருடங்களாக நிலுவையில் கொடுக்க வேண்டிய தொகை ரூ.5000 சேர்த்து 2026 பொங்கல் பரிசுத்தொகையை ரூ.8000 ஆக உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்று தமிழக பாஜக கேட்டுக் கொண்டுள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டம்
அதேபோல பொங்கல் பரிசு தொகையை தரமானதாகவும், ஊழலின்றியும் வழங்க வேண்டும் என்றும் அடுத்தடுத்த அறிக்கைகளை விடுத்து கேட்டு கொண்டுள்ளது..
இந்நிலையில், அரசு ஊழியர்களின் 23 ஆண்டு கால கோரிக்கையை பூர்த்தி செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்துள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.. இந்தத் திட்டத்தின் மூலம் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு நிகரான பலன்களை அரசு ஊழியர்கள் பெறுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
அரசு ஊழியர்களுக்கு பணப்பலன்
ஆனால், கவர்ச்சி முலாம் பூசப்பட்டு அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தத் திட்டம் தமிழக அரசு ஊழியர்களை ஏமாற்றும் நோக்கம் கொண்ட மோசடித் திட்டம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன,.
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் பெறுவதற்கான பணிக்காலம் எவ்வளவு என்பது குறித்து தெளிவாக அறிவிக்கப்படவில்லை. ஒருவர் அரசு பணியில் சேருவதற்கு 30 வயதிற்கும் மேலாகும் நிலையில், அவர்கள் 30 ஆண்டுகள் பணி செய்வது என்பது சாத்தியமற்றது. ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிப் பணிக்காலத்தை நிறைவு செய்யாமல் பணி ஓய்வு பெறும் அனைத்து அலுவலர்களுக்கும் குறைந்தப்பட்ச ஓய்வூதியம் வழங்கப்படும் என்று திமுக அரசு அறிவித்துள்ளது. அதன் அளவு குறித்து எந்த விளக்கமும் அறிவிப்பில் இடம்பெறவில்லை என்று பாமக குற்றம் சாட்டி வருகிறது.
புதிய ஓய்வூதிய திட்டம்
இந்நிலையில், தமிழக பாஜக இந்த விஷயத்தையும் கையில் எடுத்துள்ளது.. தமிழக பாஜக துணைத் தலைவர் ஜெயப்பிரகாஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.. அதில் உள்ளதாவது:
தமிழக அரசு ஊழியர்களுக்காக, தி.மு.க., அரசு அறிவித்துள்ள ஓய்வூதிய திட்டம், முற்றிலும் கண்துடைப்பு நாடகம். தற்போது, நடைமுறையில் உள்ள பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில், அரசு ஊழியர் தன் ஊதியத்தில் இருந்து, 10 சதவீதம் பங்களிக்கிறார். அதேபோல், அரசும், 10 சதவீதம் பங்களித்து வருகிறது.
பணம் பற்றாக்குறை
புதிதாக அறிவித்துள்ள ஓய்வூதிய திட்டத்தில், அரசு ஊழியர் ஒவ்வொரு மாதமும், 10 சதவீதம் பங்களித்து கொண்டே வர வேண்டும். ஊழியர் ஓய்வு பெறும்போது, பற்றாக்குறை வந்தால், அரசு தன் நிதியில் இருந்து, அதை ஈடு செய்யும் என்று கூறுகிறது. உண்மையில் பற்றாக்குறை வர வாய்ப்பில்லை.
ஏனெனில், மாதம் 50,000 ரூபாய் சம்பாதிக்கும் ஒருவர், அதிலிருந்து 10 சதவீதத்தை, வங்கி கணக்கில் முதலீடு செய்து வந்தாலே, ஓய்வுபெறும் போது, அது, 1.41 கோடி ரூபாயாக இருக்கும். இதற்கு, 8 சதவீத வட்டி கணக்கிட்டால், அதன் வாயிலாக, மாதம் 94,518 ரூபாய் கிடைக்கும். இங்கு தான் பற்றாக்குறை வரும் என்றும், அதை நாங்கள் ஈடு செய்வோம் என்றும் அரசு ஏமாற்றி இருக்கிறது.
நாளைய அரசுக்கு நிதிச்சுமை
ஒரு அரசு ஊழியர், 23 வயதில், 2003ல் பணியில் சேர்ந்தால், இந்த ஓய்வூதிய திட்டத்தின்படி, அவருக்கான உண்மையான ஓய்வூதியம், 2040க்கு பின்பே துவங்கும். அப்போது திட்டத்தை அறிவித்த அரசு இருக்க போவதில்லை. இன்றைய அறிவிப்பு வாயிலாக, நாளைய அரசு மீது நிதிச்சுமையை வைக்கும், அரசியல் தந்திரம்.
ஏற்கனவே, 'நீட்' தேர்வு ரத்து போன்ற பொய் வாக்குறுதிகளை வழங்கிய தி.மு.க., தற்போது அரசு ஊழியர்களை ஏமாற்ற, ஓய்வூதிய திட்டத்தை அறிவித்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications