அரசு ஊழியர்கள் கவனிக்க வேண்டிய புதிய சிக்கல்.. புதிய ஓய்வூதியம் எப்போது நடைமுறைக்கு வரும்?
சென்னை: இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டம் விவாதிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் புதிய ஓய்வூதியத்திற்கு நிதியுதவி அளிக்கப்படுவதற்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்றாலும், இடைக்கால பட்ஜெட் தான் அரசால் தாக்கல் செய்ய முடியும். முழுமையான பட்ஜெட்டை 2026 ஜூன் மாதம் ஆட்சிக்கு வரும் அரசு தான் ஒதுக்க முடியும். அப்போது தான் புதிய ஓய்வூதிய சிக்கலுக்கு முழுமையான தீர்வு கிடைக்கும்.
தமிழ்நாடு சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் வருகிற 20-ந்தேதி தொடங்குகிறது. முதல் நாள் கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி உரை நிகழ்த்துவது வழக்கம். அதேபோல் சட்டசபை கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பு, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூடி விவாதிப்பது வழக்கம்.

அந்த வகையில் இன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த ஆண்டு முதல்முறையாக கூடும் அமைச்சரவை கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் பங்கேற்றனர், இந்த கூட்டத்தில் கவர்னர் உரை குறித்து விவாதிக்கப்பட்டது. அரசின் உரையை கவர்னர் ஏற்கனவே புறக்கணித்துள்ள நிலையில், இந்த ஆண்டு தமிழக அரசின் உரையை சட்டசபையில் கவர்னர் ஆர்.என்.ரவி வாசிப்பாரா? என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது,
மேலும் தமிழக அரசின் திட்டங்கள் மீது எதிர்க்கட்சிகள் வைத்துள்ள குறைகள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு, சட்டசபையில் தரவுகளுடன் பதிலளிக்கும் வகையில் கருத்துகளை எடுத்துரைப்பதற்கு அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல் முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் வெளியிட்ட உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் இடைக்கால பட்ஜெட்டில், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டிருக்கிறது.
சட்டசபை தேர்தல் தேதி பிப்ரவரி மாத இறுதியில் அறிவிக்க வாய்ப்புள்ள நிலையில் அப்போது தான் இடைக்கால பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படும். எனவே அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் தொடர்பான நிதி ஒதுக்கீடு என்பது வரும் ஜூலையில் தான் தெரியவரும். 2026க்கு பிறகு வரும்புதிய அரசு திமுக அரசோ அல்லது எந்த அரசோ, அவர்கள் தான் முடிவு செய்ய முடியும்.
அப்போது தான் நிதி ஒதுக்கீடு தொடர்பாக முடிவெடுக்க முடியும். அதேநேரம் அரசுக்கு போதிய வருவாய் இருந்தால் தான் அரசால் ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியும் என்பதால் வருவாய் உறுதி செய்ய வேண்டியது முக்கியம் ஆகும்.இல்லாவிட்டால் அரசு கடும் நிதி நெருக்கடியை சந்திக்கும் அபாயமும் உள்ளது என்கிறார்கள் எதிர்க்கட்சிகள்.












Click it and Unblock the Notifications