பண்ணை வீடுகள், ரிசார்ட்களில் நிசப்தம்.. களையிழந்த ஸ்டார் ஓட்டல்கள்.. நியூஇயர் கொண்டாட்டத்திற்கு தடை?
ஸ்டார் ஹோட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்படும் என்கிறார்கள்
சென்னை: புத்தாண்டு நெருங்கி வரும் நிலையில், ஸ்டார் ஹோட்டல்களிலும், பண்ணை வீடுகளிலும் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்படும் என்றே தெரிகிறது.
கடந்த வருடமும் கொரோனா தலைதூக்கி இருந்தது.. அதனால் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டது..
இந்த வருட இறுதியிலும் கொரோனா முழுமையாக நீங்கவில்லை என்றாலும், கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதற்குள் தமிழகத்திலும் ஒமைக்ரான் வைரஸ் பரவ ஆரம்பித்துவிட்டது..

புத்தாண்டு
ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் சிலருக்கு அதற்கான அறிகுறிகள் உள்ளதாக தெரிகிறது.. அதனால், தமிழக அரசு மீண்டும் தீவிரத்தை கையில் எடுத்து வருகிறது.. வழக்கமாக, புத்தாண்டு என்றால் கொண்டாட்டம் நிறைந்து காணப்படும்.. புத்தாண்டுக்கு முதல்நாளில் இருந்தே பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட தயாராவார்கள்.. ஆனால், இந்த முறை, புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது..

மெரினா பீச்
மெரினா பீச்சில் வருகிற 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய 2 நாட்கள் பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.. மெரினா பீச்சை போலவே, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடுகளிலும், நட்சத்திர ஓட்டல்களிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடப்பது வழக்கம்.. ஆனால் கடந்த முறை அனுமதி தரப்படவில்லை.. அந்த வகையில் இந்த முறையும் இதற்கான அனுமதி கிடைக்காது என்றே சொல்கிறார்கள்..

விதிமுறைகள்
இன்னும் இதை பற்றி எந்தவிதமான அறிவிப்பும் வரவில்லை. இதை பற்றி அரசும் இன்னும் முடிவெடுக்கவில்லை.. நட்சத்திர ஓட்டல் ஓனர்களும் எந்தவிதமான ஆலோசனையும், முடிவும் எடுக்கவில்லை.. எனினும், யாரும் கூட்டம் கூடக்கூடாது என்ற பொது விதி நடைமுறையில் உள்ளதால், நிச்சயம் பண்ணைவீடுகள், ஸ்டார் ஹோட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்படும் என்றே தெரிகிறது...

ஹோட்டல்கள்
காரணம், புத்தாண்டு கொண்டாட்டம் என்றாலே ஒரு மாதத்துக்கு முன்பேயே அதற்கான ஏற்பாடுகளில் ஸ்டார் ஹோட்டல்கள் ஈடுபட்டுவிடும் நிலையில், இப்போது அதற்கான அறிகுறியே தென்படவில்லை.. அதனால் இந்த வருடமும் கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்படும் என்றே நம்பப்படுகிறது... ஒமிக்ரான் பரவி வரும் சூழலில், இப்படி தடை விதிக்கப்படும் ஒருவகையில் நல்லதுதான் என்று பொதுமக்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications