கூட்டறிக்கை வெளியிட்டும் கூடாத இதயங்கள்... நீறு பூத்த நெருப்பாக தகிக்கும் அதிமுக..!
சென்னை: சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அதிமுகவில் எழுந்துள்ள உட்கட்சி மோதல் அக்கட்சியின் அடிமட்ட நிர்வாகிகளையும், தொண்டர்களையும் கலக்கம் அடையச் செய்துள்ளது.
அதிமுகவில் யார் முதல்வர் வேட்பாளர் என்ற விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் அதனை ரசித்து வருகிறது சசிகலா தரப்பு.
கூட்டறிக்கை வெளியிட்டும் கூடாத இதயங்களாகவே இருக்கின்றனர் ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆதரவாளர்கள்.

கட்டுப்பாடு
இந்தியாவில் வேறெந்த அரசியல் கட்சிக்கும் இல்லாத பெருமை அதிமுகவுக்கு ஒரு காலத்தில் இருந்தது. ஜெயலலிதா இருந்தவரை கட்சியில் சிறிய சலசலப்பிற்கு கூட இடமிருக்காது. அந்தளவிற்கு கட்டுக்கோப்புடன் அதிமுகவை வழி நடத்தி வந்தார் அவர். அம்மா என்ற ஒற்றை மந்திரத்தில் இயங்கி வந்த அந்தக் கட்சி, 2017-ம் ஆண்டு தேங்காய் சிதறலாக உடைந்தது. இன்று வரை இன்னும் அது முழுமையாக ஒட்டவில்லை என்பதே நிதர்சனம்.

யார் முதல்வர்?
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அடுத்தது யார் முதல்வர் வேட்பாளர் என்ற கேள்வி ஓ.பி.எஸ். -இ.பி.எஸ். இடையேயான விரிசலை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் அமைச்சர்கள் ஆளுக்கொரு கருத்துக் கூறியிருப்பதை சாதாரணமாக கடந்து விடமுடியாது. கட்சிக்குள் நிலவும் குழப்பங்களையும், அதிகார மோதலையும் அமைச்சர்கள் அளித்த பேட்டிகள் வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளன.

ஓ.பி.எஸ்.கெடு
இதனிடையே சுதந்திரத்தினத்தன்று சென்னை பசுமை வழிச்சாலையில் நடைபெற்ற பஞ்சாயத்துக்கள் டெல்லி வரை எதிரொலித்துள்ளன. கட்சியா? ஆட்சியா? என்பதில் தனக்கொரு முடிவு தெரிந்தாக வேண்டும் என்பதில் உறுதியாக நிற்கிறார் துணை முதல்வர் ஓ.பி.எஸ். மேலும், இ.பி.எஸ். தரப்பிடம் விரைவில் இதற்கான பதிலைக் கேட்டுச்சொல்லுமாறும் அவர் கெடு விதித்திருக்கிறாராம்.

கூடாத இதயம்
மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி என்பதை போல் மேல் மட்ட தலைவர்களின் அதிகார மோதலால் அதிமுக அடிமட்ட தொண்டர்கள் கலக்கத்தில் இருந்து வருகின்றனர். தாங்கள் இருவரும் ஒற்றுமையாக தான் உள்ளதாக ஊடகங்களுக்கு காட்டும் பொருட்டு ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். கூட்டறிக்கை வெளியிட்டும் இதயங்கள் கூடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே அதிமுகவில் நடக்கும் ஒவ்வொரு அசைவுகளையும் சசிகலா தரப்பு உன்னிப்பாக கவனிக்கத் தவறவில்லை.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications