சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு; ஞாயிற்றுக்கிழமை லாக்டவுன் ரத்து..பள்ளிகளும் திறப்பு ..அரசு அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் கொரோனா குறைந்து வரும் நிலையில் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பிப்ரவரி 1-ம் தேதி முதல் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    ஞாயிறு ஊரடங்கு ரத்து.. இரவு நேர ஊரடங்கு கிடையாது!

    இந்தியாவில் விடாமல் அதிகரிக்கும் கொரோனா.. 3 லட்சத்தை தாண்டி தினசரி கேஸ்கள்.. கேரளா, கர்நாடகா மோசம் இந்தியாவில் விடாமல் அதிகரிக்கும் கொரோனா.. 3 லட்சத்தை தாண்டி தினசரி கேஸ்கள்.. கேரளா, கர்நாடகா மோசம்

    தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில் கடந்த 5 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைய தொடங்கி உள்ளது. தொற்று பாதிப்பு 30,000-க்கும் கீழே குறைந்துள்ளது.

    குறைந்து வரும் கொரோனா

    குறைந்து வரும் கொரோனா

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததை அடுத்து கடந்த 6ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமலானது. இரவு நேர ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 2 மணி வரையும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேரமும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.

    முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

    முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

    தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கை ரத்து செய்ய வேண்டும் என வணிகர் சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தன. இதற்கிடையே ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினார். கொரோனா குறைந்து வருவதால் தளர்வுகள் கொடுக்கலாமா என்பது பற்றி ஆலோசனை செய்யப்பட்டது. இதனால் ஊரடங்கு ரத்து செய்யப்படும் என்ற தகவல் பரவியது.

    இரவு லாக்டவுன், சண்டே லாக்டவுன் ரத்து

    இரவு லாக்டவுன், சண்டே லாக்டவுன் ரத்து

    இந்த நிலையில் தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்டுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதேபோல் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வருகிற 30-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும்

    அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும்

    vஇதேபோல் தமிழகத்தில் பிப்ரவரி 1-ம் தேதி முதல் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெறும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பாதுகாப்பு மையங்களை தவிர்த்து மற்ற அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தொழில்பயிற்சி மற்றும் பயிற்சி நிலையங்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வருகிற 1-ம் தேதி முதல் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    நர்சரி பள்ளிகளுக்கு அனுமதி உண்டா?

    நர்சரி பள்ளிகளுக்கு அனுமதி உண்டா?

    அதே வேளையில் மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை ஹோட்டல் பேக்கரி சினிமா தியேட்டர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    English summary
    night curfew and full curfew on Sundays have been canceled due to declining corona In Tamil Nadu, It has also been announced that live classes will be held in schools from 1st to 12th class from 1st February
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X