ஜமேஷா முபினுக்கு நெருக்கமானவர்.. திருச்சூர் சிறையில் இருக்கும் 13வது நபரிடம் விசாரிக்க என்ஐஏ திட்டம்
சென்னை: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு விவகாரத்தில் 13 ஆவது நபரிடம் விசாரிக்க என்ஐஏ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
கோவையில் கடந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகைக்கு முதல் நாள் உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே காரில் ஜமேஷா முபின் என்பவர் காரில் வந்தார். காரில் யாரோ வெடிபொருட்களை கடத்தி வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அந்த நேரம் பார்த்து உஷாரான ஜமேஷா முபின் காரில் இருந்த சிலிண்டரை வெடிக்கச் செய்ததாக தெரிகிறது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். தீபாவளி நாளன்று கூட்டநெரிசலை பயன்படுத்தி பெரிய உயிர் சேதத்தை ஏற்படுத்த திட்டமிட்டிருக்கலாம் என தெரிகிறது.
இந்த நிலையில் கோவை போலீஸார் விசாரணை நடத்தியதில் கோவை, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அசாருதீன், பெரோஸ் இஸ்மாயில், உமர் பாரூக் உள்ளிட்ட 11 பேர் இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து 11 பேரையும் தேசிய புலனாய்வு துறை அமைப்பினர் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இவர்கள் மீது பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய கோவை உக்கடம் ஜி.எம். நகரை சேர்ந்த முகமது இட்ரீஸ் என்பவரை என்ஐஏ அதிகாரிகள் நேற்று மாலை கைது செய்தனர்.
சிலிண்டர் வெடிப்பில் 12 ஆவது நபராக கைதான இட்ரீஸை சென்னை அழைத்து வந்தனர். இவர் முபினின் நண்பர். இந்த நிலையில் தமிழகத்தில் 30 இடங்களில் தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் என்ஐஏ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சென்னையில் 3 பேரது வீட்டிலிருந்து பென்டிரைவ் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் கேரளா மாநிலம் திருச்சூர் சிறையில் உள்ள முகமது அசாருதீனிடம் விசாரிக்க என்ஐஏ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இவர் வேறு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சூர் சிறையில் இருக்கிறார். இவரை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட ஜமேஷா முபின் இறப்பதற்கு முன்பு சிறையில் அசாருதீனை சந்தித்தது தெரியவந்தது. முகமது அசாரூதின் விசாரிக்கப்பட்டால் அவர் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் விசாரிக்கப்படும் 13 ஆவது நபர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications