ஜாக்கிரதை..'சோசியல் மீடியா மூலம் தொடர்பு' சென்னை தொழிலதிபருக்கு விபூதி அடித்த நைஜீரிய மோசடி கும்பல்
சென்னை: ஆயுர்வேத மூலப்பொருட்களை சப்ளை செய்ய வேண்டும் எனவும் கமிஷன் தொகை தருவதாகவும் கூறி சென்னை கொளத்தூரை சேர்ந்த ஒருவரிடம் நைஜீரிய மோசடி கும்பல் நூதன முறையில் ரூ.33 லட்சம் வரை மோசடி செய்துள்ளது. சமூக வலைத்தளமான லிங்க்ட் இன் மூலமாக தொடர்பு கொண்டு இந்த மோசடியை நைஜீரிய மோசடி கும்பல் ஈடுபட்டுள்ளது.
சமீப காலமாக இணையதள மோசடி சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை திருடுவது.. பரிசு பொருட்கள் விழுந்துள்ளதாகவும் அதை பெற வேண்டும் என்றால் குறிப்பிட்ட தொகையை கட்டுங்கள் எனவும் பல விதமாக ஆசைவார்த்தைகளை கூறி ஏமாற்று வலையை விரிக்கின்றனர்.

அதீத ஆசையால்..
மக்களும் சிலர் அறியாமையாலும் அதிக பணம் கிடைக்கும் என்ற அதீத ஆசையாலும் மோசடி கும்பல்கள் விரிக்கும் வலையில் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை பறிகொடுத்து அல்லல் படுகின்றனர். இந்த நிலையில், இதேபோன்ற மோசடியில் தான் ஏமாந்து சென்னையை சேர்ந்த ஒருவர் ரூ.33 லட்சத்தை இழந்தார். இந்த மோசடியில் ஈடுபட்ட நைஜீரிய நாட்டவர்களை போலீசார் தற்போது பொறிவைத்து பிடித்துள்ளனர். நைஜீரியைவை சேர்ந்தவர்கள் சமூக வலைத்தளம் மூலம் இந்த மோசடியை அரங்கேற்றியது எப்படி என்ற விவரத்தை இங்கே பார்க்கலாம்.

புற்றுநோயை குணப்படுத்தக்கூடிய
சென்னை கொளத்தூரில் உள்ள பூம்பூகார் நகர் பகுதியை சேர்ந்த விஜயராகவன் தொழிலதிபரான இவர் ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவரை நைஜீரிய நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் லிங்க்ட் இன் இணையம் மூலமாக என்னை தொடர்பு கொண்டார். அதில், ஆயுர்வேத மூலப் பொருட்கள் விநியோகம் செய்ய வணிக அமைப்பு ஒன்றை உருவாக்கி இருக்கிறோம். புற்றுநோயை குணப்படுத்தக்கூடிய ஆயுர்வேத மூலப்பொருட்கள் தேவைப்படுவதாகவும் அதை நாங்கள் கொள்முதல் செய்ய முடியாது.

ரூபாய் 33 லட்சம் கொடுத்து
நீங்கள் கொள்முதல் செய்து கொடுத்தால் உரிய லாபம் தருகிறோம் என்று ஆசை வலையை விரித்துள்ளனர். இதனை நம்பிய விஜயராகவன், ஒரு லிட்டர் ஆயுர்வேத எண்ணெயினுடைய விலை ஒரு லட்சத்திற்கு 80 ரூபாய் எனவும் 18 லிட்டர் தேவைப்படுவதாகவும் கூறினார். இதையும் நம்பி விஜய் 18 லிட்டர் எண்ணெயை ரூபாய் 33 லட்சம் கொடுத்து வாங்கியிருக்கிறார். அதன்பிறகு பல்வேறு முறைகளில் அலைக்கழித்துள்ளனர். இறுதியில் தான் இதில் பெரிய மோசடி நடந்து இருப்பது அவருக்கு தெரியவந்து இருக்கிறது.

நைஜீரிய கும்பல்
அதாவது கனடா நாட்டில் இருந்து வாங்குகிறோம் என்று கூறியதும் இந்தியாவில் ஆயில் சப்ளை செய்கிறோம் என்று கூறியவர்களும் ஒரே கும்பல்தான் என்று தெரியவந்துள்ளது. அதேபோல, தர பரிசோதனை என எண்ணெய் தரமானதுதான் என்றுகூறியதும் அதே நைஜீரிய கும்பல்தான் என்று தெரியவந்துள்ளது. இவ்வாறாக 3 முறைகளிலும் ஏமாற்றி பணத்தை பறித்துள்ளனர். இந்த கும்பலை சென்னை மத்திய குற்றப்பிரிவு மும்பையில் வைத்து கைது செய்தனர்.

லிங்க்ட் இன் இணையதளம் மூலம்
நைஜீரியர்கள் ஒகோரிகாட்ஸ்வில் சைனாசா (வயது 32), உச்சே ஜான் இமேகா(47), காட்வின் இமானுவேல்(32), எபோசி உச்சென்னா ஸ்டான்லி(32) ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நைஜீரியர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், லிங்க்ட் இன் இணையதளம் மூலம் இதே பாணியில் பலரிடம் மோசடியை அரங்கேற்றி இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

அறிமுகம் இல்லாத நபர்களுக்கு
இதனிடையே, இணையதளங்கள் மூலம் வியாபாரம் தொடங்குவதாக கூறினால் நன்கு விசாரிக்க வேண்டும். ஆசை வார்த்தைகளை நம்பி அறிமுகம் இல்லாத நபர்களுக்கு பணம் அனுப்ப கூடாது போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இதுபோன்ற மோசடியில் ஈடுபடும் நபர்கள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு பெரிய நெட்வொர்க்குடன் செயல்படுவதாலும் வெளிநாட்டு நபர்களும் மோசடியில் ஈடுபடுவதால் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை பிடிப்பதிலும் பல்வேறு சவால்கள் போலீசாருக்கும் உள்ளன. இதனால், பொதுமக்கள் கவனமுடன் இருந்து மோசடியில் சிக்காமல் இருக்க வேண்டும் என்பதும் சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.












Click it and Unblock the Notifications