முருகன் மாநாட்டில் பாருங்க.. போஸ் கொடுத்து நின்ற நிகிதா.. கூடவே யாருங்க இது.. இந்த போட்டோவை பாருங்க
சென்னை: மதுரை முருகன் மாநாட்டில் நிகிதா கலந்து கொண்ட சம்பவம் தற்போது கவனம் பெற்றுள்ளது. இந்த போட்டோ வைரலாகி வருகிறது. நிகிதா பல அரசியல் தலைவர்களுடன் தனக்கு நெருக்கம் என்று கூறி அரசியல் ரீதியாக பலருக்கு அழுத்தம் கொடுத்து வந்தது அம்பலம் ஆகி உள்ளது.
ஜூன் 22, 2025 அன்று, இந்து முன்னணி சார்பில் மதுரையில் "முருகன் பக்தர்கள் மாநாடு" என்ற ஒரு பெரிய ஆன்மீக நிகழ்வு நடந்தேறியது. இந்த மாநாட்டில், தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் ஐந்து லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை வழிபட்டனர். ஆறு முக்கியமான முருகன் கோயில்களின் மாதிரி வடிவங்கள் இங்கே காட்சிப்படுத்தப்பட்டன, மேலும் நாள் முழுவதும் வழிபாட்டு நிகழ்வுகள் மற்றும் பக்திப் பாடல்கள் இசைக்கப்பட்டன.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக தலைவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில்தான் நிகிதா கலந்து கொண்டார் . நிகிதா உடன் அந்த மாநாட்டில் அவரின் அம்மாவும் கலந்து கொண்டார். வீல் சேரில் அம்மாவை நிகிதா அழைத்து வந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
மோசடி ராணி நிகிதா
நிகிதா என்பவர் வேலை மோசடியில் மட்டுமல்லாது, பல திருமண மோசடிகளிலும் ஈடுபட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக, நிகிதாவால் பாதிக்கப்பட்ட திருமாறன் என்பவர் பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அவர் அளித்த பேட்டியில், நிகிதா தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாகக் குற்றம் சாட்டியுள்ளார். "நிகிதாவை எனக்கு 21 வருஷத்துக்கு முன்னாடியே தெரியும். திருமண மோசடியில் பாதிக்கப்பட்டதில் நானும் ஒருவன். நிகிதாவுடன் ஒரு நாள் தான் என்னோட திருமண வாழ்க்கை. ஆனால் பல லட்சம் அவர் ஏமாற்றி விட்டார்" என்று திருமாறன் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், "அவர் என்னிடம் 20 லட்சம் வரை ஏமாற்றி உள்ளார். அவரின் அப்பா என்னிடம் 10 லட்சம் வாங்கிவிட்டுத்தான் விவாகரத்து கொடுக்கவே ஒப்புக்கொண்டார். அவர் குடும்பமே ஒரு சீட்டிங் குடும்பம். தாலி கட்டிட்டு ஒருநாள் வாழ்வார்... அதன்பின் வேறு எங்காவது ஓடி போயிட்டு வரதட்சணை கேஸ் போடுறது தான் நிகிதாவுக்கு வேலை. இதை வைத்து பல முறை ஏமாற்றி உள்ளார்" என்று நிகிதாவால் ஏமாற்றப்பட்ட திருமாறன் தெரிவித்துள்ளார்.
அஜித் குமார் மரண வழக்கு: நிகிதா மோசடி குற்றச்சாட்டு
அஜித் குமார் மரண வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நிகிதா, கோயம்புத்தூரில் தஞ்சம் புகுந்ததாக கூறப்படுகிறது. நிகிதாவை நேரில் பார்த்த ஒருவர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தும், அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த நிகிதா, அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல நபர்களிடம் இருந்து சுமார் 16 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது. நிகிதா மீது ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் உள்ளன.
இதற்கு முன்பே வேலை வாங்கி தருவதாக லட்சங்களில் மோசடி செய்துள்ளார் நிகிதா. அப்படி மோசடி செய்ததோடு இல்லாமல், தலைமறைவாகி உள்ளார். திருமங்கலத்தில் நிகிதா தலைமறைவாக இருந்தபோது, வேலை கேட்டு பணம் கொடுத்தவர்கள் பணத்தைத் திருப்பிக் கேட்டவர்களை கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள், "கொடுத்த காசைத் திருப்பிக் கேட்கிறீர்களா? கொன்று விடுவேன் என்று நிகிதா மிரட்டியதாக" தெரிவித்தனர்.
2011ஆம் ஆண்டு நிகிதா மீது திருமங்கலத்தில் புகார் அளிக்கப்பட்டது. அவரது குடும்பத்தினர் மீது ஆறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆனாலும், அவர் தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டார். ஆலப்பட்டியில் உள்ள தனது வீட்டை கல்லூரி நிர்வாக இயக்குனரிடம் விற்க முயன்று 25 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார். மேலும், மற்றொரு நபரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 25 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார். இந்த வழக்குகள் தற்போது நிலுவையில் உள்ளன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications