Nilgris Exit Poll 2024: நீலகிரியில் வெல்லப்போவது யார்? ஆ ராசா vs எல் முருகன்.. தந்தி டிவி கணிப்பு
சென்னை: நீலகிரி தொகுதியில் வெல்லப்போவது யார் என்பது குறித்து தந்தி டிவி தேர்தலுக்கு பிந்தைய கணிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த கணிப்பில் திமுக சார்பில் போட்டியிடும் ஆ ராசா வெல்ல அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடந்து முடிந்தது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று மாலை முதல் வெளியாகி வருகிறன. தமிழகத்தை பொறுத்தவரை திமு காங்கிரஸ் கூட்டணியே வெல்ல வாய்ப்பு உள்ளதாக கணிப்புகள் வெளியாகி உள்ளன.

தொகுதி வாரியான நிலவரத்தை பொறுத்தவரை 'மலைகளின் அரசி' என்று அழைக்கப்படும் உதகமண்டலத்தை தலைமையிடமாக கொண்ட நீலகிரி லோக்சபா தொகுதியில் திமுகவே வெல்ல வாய்ப்பு உள்ளதாக தேர்தலுக்கு முந்தைய கணிப்புகள் கூறியிருந்தன
இந்த நீலகிரி தொகுதியை பொறுத்தவரை உதகை, குன்னூர், கூடலூர் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகள் மட்டுமே நீலகிரி மாவட்டத்தில் இருக்கின்றன. மேட்டுப்பாளையம் தொகுதி கோவை மாவட்டத்தில் இருக்கிறது. அவினாசி திருப்பூர் மாவட்டத்திலும், பவானிசாகர் தொகுதி ஈரோடு மாவட்டத்திலும் உள்ளன. மொத்தம் உள்ள ஆறு தொகுதியில் 3 மலையிலும், 3 சமவெளியிலும் இருக்கிறது. கலாச்சாரம் முதல் மக்களின் மனநிலை வரை 6 தொகுதியிலும் 3 விதமாக இருந்தது.
நீலகிரி தொகுதியில் கடந்த முறை திமுகவின் ஆ ராசா தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தியாகராஜனை விட சுமார் 2 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் கடந்த முறை அதிமுக, பாஜக இணைந்து கூட்டணியாக போட்டியிட்டன. இந்த முறை தனித்தனியாக களம் இறங்கி உள்ளன.
இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கணிப்பினை தந்திடிவி வெளியிட்டுள்ளது. இதில் நீலகிரி தொகுதியில் இந்த முறை திமுக சார்பில் ஆ ராசா 36 சதவீதம் வாக்குகள் பெற்றுவார் என்று கூறப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் போட்டியிடும் லோகேஷ் தமிழ்செல்வன் 31 சதவீதம் வாக்குகள் பெறுவார் என்றும் தந்தி டிவி கணித்துள்ளது. பாஜக சார்பில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல் முருகன் 24 சதவீதம் வாக்குகள் பெறுவார் என்றும் தந்தி டிவி கணிப்பில் கூறியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications