மழை முடியலை நீலகிரி கனமழை இன்னமும் இருக்கு - எச்சரிக்கும் வானிலை மையம்
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 13 மாவட்டங்களுக்கு மிதமான மழை வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை: நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 13 மாவட்டங்களுக்கு மிதமான மழை வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தென்மேற்குப் பருவமழை கடந்த ஜூன் மாதத்தில் தொடங்கியது. படிப்படியாக அதிகரித்து ஆகஸ்ட் மாதத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கொட்டித்தீர்த்தது. தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பெய்த மழையால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. அணைகள் நிரம்பியுள்ளன. உபரி நீர் திறப்பால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 1 முதல் 10ஆம் தேதிவரை கொட்டிய கனமழையால் நீலகிரி மாவட்டத்தின் பந்தலூர், கூடலூர், அவலாஞ்சி ஆகிய பகுதிகள் முற்றிலும் நிலைகுலைந்து போயுள்ளன. கடந்த இரு தினங்களாக சற்றே குறைந்தாலும் சராசரியாக 100 மில்லி மீட்டருக்கும் அதிகமாகவே மழை பதிவாகியுள்ளது. பருவமழைக்காலம் முடிந்து விட்டதா இனி மழை இல்லையா என்று நினைக்கத் தொடங்கியிருந்த நேரத்தில் மீண்டும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இன்று வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலூர், கோவை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் புதுச்சேரி, காரைக்கால், போன்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும்.
வேலூர் ,சேலம் ,கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஆகிய மாவட்டங்களிலும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் கூறப்படுகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்யலாம்.
ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் 15ம் தேதி வரை கோவா ,மகாராஷ்டிரா, குஜராத் கடலோர பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வரை காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை ஆய்வு மைய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அடி வெளுக்கப்போகும் கனமழை! 7 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்.. உஷார் மக்களே! -
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை!












Click it and Unblock the Notifications