மாணவிகளை உல்லாசம் அனுபவிக்க கேட்டது யார்?.. செய்தது என்ன?.. நிர்மலா தேவி பரபரப்பு வாக்குமூலம்
Recommended Video

சென்னை: மாணவிகளை உல்லாசம் அனுபவிக்க அனுப்புமாறு யார் கேட்டனர் என்பது குறித்த பரபரப்பு வாக்குமூலத்தை நிர்மலாதேவி வெளியிட்டார்.
அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்த நிர்மலா தேவி, மதுரை பல்கலைக்கழக அதிகாரிகளின் படுக்கையை பகிர்ந்து கொள்ள மாணவிகளை நிர்பந்தித்தார்.
இதையடுத்து அவர் கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சிபிசிஐடி போலீஸாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில் அவர் அளித்துள்ள தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
[காட்டோரம்.. ரோட்டோரம்.. கருப்பசாமியுடன் காரில்.. நிர்மலாதேவி சொன்ன பரபர தகவல்!]

உல்லாசம்
அவர் கூறுகையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடந்த புத்தாக்க பயிற்சி குறித்து அங்கு பணிபுரியும் வணிகவியல் துறை உதவி பேராசிரியராக உள்ள முருகனை தொடர்பு கொண்டேன். அதிலிருந்து அவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து என்னை பார்க்க அருப்புக்கோட்டைக்கு வந்த போது எனது வீட்டுக்கு அழைத்து சென்று அவருடன் உல்லாசமாக இருந்தேன்.

கல்லூரி மாணவிகள்
பின்னர் கல்லூரி மாணவிகளை தனக்கு ஏற்பாடு செய்யும்படி என்னிடம் கேட்டார். அதற்கு தற்போது கல்லூரி நிலைமை சீராக இல்லை, பின்னர் பார்க்கலாம் என கூறினேன். இந்தநிலையில் நான் மதுரை பல்கலைக்கழகத்துக்கு புத்தாக்கப் பயிற்சிக்காக சென்ற போது கல்லூரி மாணவிகளிடம் பேசி ஏற்பாடு செய்துவிட்டீர்களா என முருகன் கேட்டார்.

முருகன்
நான் சில மாணவிகளின் விவரங்களை தெரிந்து வைத்துள்ளேன். அவர்களிடம் பேசி ஏற்பாடு செய்கிறேன் என்று கூறினேன். அதன்பிறகு கருப்பசாமியின் எண்ணை என்னிடம் கொடுத்து உதவிகள் தேவையென்றால் தொடர்பு கொள்ளுமாறு முருகன் தெரிவித்தார்.

காரில் உல்லாசம்
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தல் நான் இருந்த போது கருப்பசாமி எனக்கு போன் செய்து, தொலைதூர கல்வி அலுவலகத்துக்கு வரும்படி கூறினார். உடனே, நான் அங்கு சென்றேன். அங்கு கருப்பசாமி இயக்குனரை எனக்கு அறிமுகம் செய்துவைத்தார். அவருடைய பெயர் எனக்கு தெரியாது. பின்னர் கருப்பசாமியின் சொந்த ஊருக்கு அவரை காரில் அழைத்து சென்ற போது அவருடன் காரில் உல்லாசமாக இருந்தேன்.

வலியுறுத்தல்
பின்னர் எல்லாம் முடிந்த பிறகு அடுத்த வாரம் சென்னை செல்வதாகவும் அந்த சமயத்தில் கல்லூரி மாணவிகளை ரெடி செய்து தருவீர்களா என்று கேட்டார். நானும் முயற்சிக்கிறேன் என்று சொன்னேன். எனினும் அவர் தொடர்ந்து அதே விஷயத்தை என்னிடம் வலியுறுத்தினார்.

தவறான பாதை
முருகனும், கருப்பசாமியும் என்னிடம் தொடர்ந்து கேட்டுக் கொண்டதால் மார்ச் 12-ஆம் தேதி இரவு முதலே நான் என்னுடைய செல்போனில் இருந்து எங்கள் கணிதத் துறையில் 3-ஆம் ஆண்டு படிக்கும் மாணவிக்கு சூசகமான பல எஸ்எம்எஸ்களை அனுப்பினேன். இதை உடன் படிக்கும் மேலும் 3 மாணவிகளுக்கும் தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொண்டேன். எனவே மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததற்கு காரணம் முருகன் மற்றும் கருப்பசாமி என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications