இன்னும் ஆறே வருஷம்..! நாம் சீனாவையே ஓவர்டேக் செய்வோம் பாருங்க.. நம்பிக்கை தரும் நிர்மலா சீதாராமன்
சென்னை: காஞ்சிபுரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இப்போது தமிழகம் வந்துள்ளார். இந்தியத் தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனத்தின் (IIITDM) 10வது பட்டமளிப்பு விழாவில் அவர் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய நிர்மலா சீதாராமன் அமெரிக்காவில் உள்ள டாப் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை இந்தியர்கள் தான் தலைமை தாங்குவதாகத் தெரிவித்தார்.

சீனாவை ஓவர்டேக்
பட்டமளிப்பு விழாவில் அவர் மேலும் பேசுகையில், "ஐநாவின் 2019ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களின் படி, இந்தியாவின் உழைக்கும் வயது மக்கள் தொகை 2028ஆம் ஆண்டில் சீனாவை ஓவர்டேக் செய்யும். அதாவது 2028இல் சீனாவைக் காட்டிலும் வேலை செய்யக் கூடிய மக்கள் தொகை இந்தியாவில் மிக அதிகமாக இருக்கும். அத்துடன் நின்றுவிடாது. இந்தியாவில் உழைக்கும் வயது மக்கள் தொகை தொடர்ந்து அதிகரிக்கும்.

இழைக்கும் மக்கள் தொகை
2036ஆம் ஆண்டுக்குள் நமது மக்கள்தொகையில் 65% பேர் உழைக்கும் வயதில் இருப்பார்கள். அது 2047 வரை 65%ஆகவே இருக்கும். இதன் மூலம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிக்கும். இன்று இந்த உலகம் காண்பதை விட அப்போது நமது உற்பத்தித் திறன் மிக அதிகமாகவே இருக்கும்.

இந்திய சிஇஓ-க்கள்
இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்கள் மிகச் சிறந்த நிர்வாகிகளைக் கொடுக்கிறது. உலகின் டாப் 58 நிறுவனங்களின் சிஇஓ-க்களாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களே உள்ளனர். இந்தியர்கள் தலைவர்களாக இருக்கும் 11 பன்னாட்டு நிறுவனங்களின் வருவாய் பல டிரில்லியன் டாலர் மதிப்புடையது ஆகும்.

கல்வி முறை
எனவே, நமது நாட்டின் கல்வி முறையைக் குறை சொல்ல முடியாது. சொல்லப் போனால், சர்வதேச அளவில் நமது உயர் கல்வி சிறப்பாகவே உள்ளது. ஆனால் இன்னும் கூட அதை நாம் மேம்படுத்த வேண்டும். கற்பித்தல்- கற்றல் அனுபவத்தை நாம் தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்,. அப்போது தான் நம்மால் முதலிடத்தில் தொடர முடியும்.

ஸ்டார்ட்-அப்
சிலிகான் பள்ளத்தாக்கில் உள்ள அனைத்து ஸ்டார்ட் அப்களில் 25 சதவீதம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களால் நிர்வகிக்கப்படுகிறது. இந்தியாவில் மட்டும் இப்போது 100 யூனிகார்ன்கள் உள்ளன. ஏனென்றால் இப்போது நமது நாட்டில் ஸ்டார்ட்-அப் சூழல் சிறப்பாக உள்ளது. இந்த நிறுவனங்களின் சந்தை மதிப்பு மட்டும் 250 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

தொழில்முனைவோர்
இந்திய மாணவர்கள் மற்றவர்களுக்கு வேலை தரும வகையில் தொழில்முனைவோராக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். அனைவரும் தொழில்முனைவோராக மாறுவது சாத்தியமான ஒன்று தான். தொழில்துறைக்கு என்ன தேவை என்பதைப் புரிந்துகொண்டு நாம் செயல்பட்டால் போதும். சர்வதேச அளவில் தலைசிறந்த மாணவர்களை நாம் தொடர்ந்து உருவாக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்
-
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
இந்தியன் வங்கியின் மைக்ரோ கிரெடிட் கார்டு வழங்கும் விழா… மும்பையில் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications