கைலாசா நாட்டின் மீது தீவிரவாத தாக்குதலா? இன்ஸ்டாகிராமில் திடீரென அலறிய நித்யானந்தா!
சென்னை: கைலாசா நாட்டின் மீது தீவிரவாத அமைப்புகள் ஊடுருவ முயற்சிப்பதாகவம், தாங்கள் கேட்கா மர்ம விதைகளை அனுப்பி 'பயோவார்' நடத்த சதி நடப்பதாகவும் சாமியார் நித்யானந்தா அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பான தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளார்
பாலியல் புகார் குற்றச்சாட்டில் சிக்கி நாட்டை விட்டு தப்பிச்சென்றவர் சாமியார் நித்யானந்தா. இவர் வாங்கிய தனித்தீவில் ஒரு நாட்டை உருவாக்கிவிட்டதாக சொல்லிக்கொள்கிறார். அந்த நாட்டிற்கு கைலாசா என்று பெயர் வைத்தாக நித்யானந்தாவே கூறியிருந்தார்.
கைலாசா நாடு எங்கிருக்கிறது என்பது இதுவரை யாருக்கும் தெரியாத ரகசியமாக உள்ளது. அமெரிக்காவின் கடல்பகுதியில் உள்ள ஏதே ஒரு தீவில் கைலாசா நாட்டை நித்யானந்தா நிர்மானித்தாரா அல்லது இந்தியாவிலேயே இருந்து ப்ளூ ஸ்கிரினில் பேசுகிறாரா என்பது தெரியவில்லை. இதுவரை அவரது இருப்பிடத்தை யாரும் கண்டுபிடிக்க முடியவில்லை

நித்யானந்தா
ஆனால் அடிக்கடி யூடியூபில் நித்யானந்தா பிரசங்க வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். ஆன்மீக சொற்பொழிவும் ஆற்றி வருகிறார். இந்த சூழலில் நித்யானந்தா தனது நாட்டில் தீவிரவாத அமைப்புகள் ஊடுருவ முயற்சி செய்வதாகவும், நாங்கள் கேட்காத விதைகளை மர்ம நபர்கள் அனுப்பி உள்ளதாகவும், இது ஒரு பயோ வார் என்று கூறியுள்ளார்.

அமெரிக்க கதை
தன்னை பல பேர் பல்வேறு வகையில் தாக்கிவிட்டதால் இந்திய நாட்டை விட்டே வெளியேற வேண்டியதாக அந்த பதிவில் குறிப்பிட்ட நித்யானந்தா, விதைகளை அனுப்பி பயோவார் நடத்த சதி நடப்பதாக கூறியுள்ளார். விதைகளை அனுப்புவது என்ற விஷயம் கொஞ்ச நாளைக்கு முன்பு அமெரிக்காவில் நடந்திருந்தது. அங்கு ஆர்டர் செய்யாமலே சிலருக்கு விதைகள் அனுப்பப்பட்டதாக சொல்லப்பட்டது. அந்த விதைகள் நட்டால் மண் நாசமாகும் என்று சொல்லப்பட்டது. மேலும் அமெரிக்காவின் நடத்தப்பட்ட பயோவார் என்று கூட கூறினார்கள். ஆனால் கொஞ்ச நாளிலேயே அவை பொய்யானது என்பது தெரியவந்தது. அதுமாதிரி இதுவும் கூட பொய்யாக இருக்கலாம்.

அட்ரஸ் தெரியவில்லை
எனினும் அவர் வெளிட்ட பதிவல் சனாதன இந்து தர்மத்தின் வேர்களையும், இந்து மதத்தின் கடைசி விளக்கையும் அழிக்க மற்றொரு முயற்சியாக "பயங்கரவாதத்தை விதைகள்" மூலம் அனுப்பும் கொடிய சதி நடப்பதாகவே நித்யானந்தா மிக சீரிஸாக கூறியிருக்கிறார். ஆனால் அவருடைய வெப்சைட்டில் எங்குமே அட்ரஸ் இல்லை. எனவே எப்படி விதைகளை அனுப்பினார்கள் என்பது தெரியவில்லை.

ஆர்வம் காட்டவில்லை
உண்மையில் கைலாசா என்ற ஒரு நாடு இருக்கிறதா என்பது பெரும் கேள்வியாக உள்ளது. இ கைசலா என்பதாக உலகம் முழுவதும் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இணையதள முகவரிகள் எங்கிருந்து இயங்குகின்றன. அதை யார் இயக்குகிறார்கள் என்பதை கண்டுபிடிப்பது உலக நாடுகளுக்கு சவாலான காரியமான என்றால் நிச்சயம் இல்லை. ஆனால் என்ன காரணமோ இதுவரை கைலாசாவை கண்டுபிடிக்க உலக நாடுகள் ஆர்வம் காட்டவில்லை.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications