படுத்த படுக்கையாய்.. நித்யானந்தாவுக்கு என்னாச்சு.. திடீரென வெளியான வீடியோ.. தொண்டர்கள் கவலை
நித்தியானந்தா உடல்நலம் குறித்து புது வீடியோ வெளியிட்டுள்ளார்
சென்னை: என்னால் உணவு உட்கொள்ள முடியவில்லை. நான் எந்த உணவையும் வாயில் தள்ள முயன்றால் சில நிமிடங்களில் வாந்தி எடுக்கும் நிலை உள்ளது... இதே போல எனக்கு உறக்கமும் இல்லை" என்று பேசி நித்யானந்தா புது வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
Recommended Video
ஏகப்பட்ட கிரிமினல் விஷயங்களில் மாட்டிக் கொண்ட நித்தியானந்தா, வேறு ஒரு தேசத்துக்கு ஓடிவிட்டார்.. கடத்தல், பாலியல் வழக்குகளில் சிக்கி உள்ளார்..
குஜராத், கர்நாடகா போலீசாரால் இன்னமும் தேடப்பட்டு வருகிறார்.. இவர் இருக்கும் கைலாசாவை யாராலும் இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை..

கைலாசா
அந்த கைலாசா ஆஸ்திரேலியா அருகே ஒரு குட்டி தீவில் உள்ளது என்று தெரிந்தும், அங்கு யாராலும் சென்று இவரை கைது செய்ய முடியவில்லை.. ஆனால், தினமும் சோஷியல் மீடியாவில் வீடியோக்களை மட்டும் வெளியிட்டு வருகிறார்.. லைவ்-வாக பக்தர்களிடம் சொற்பொழிவு ஆற்றுகிறார்.. அப்போதும் இவரை யாராலும் சென்று கைது செய்ய முடியவில்லை..

மரணம்
இந்நிலையில் கடந்த வாரம் நித்யானந்தா உடல் நலம் பாதித்து திடீரென மரணம் அடைந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரபரப்பாக பரவியது... இதையடுத்து, நித்யானந்தா தன்னுடைய அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் போட்டோக்களுடன் கூடிய ஒரு பதிவை வெளியிட்டார்... அதில், "நான் இறக்கவில்லை, சமாதி நிலையில் இருக்கிறேன்... நான் இறந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம்...

டாக்டர்கள்
எனக்கு 27 டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இப்போது டாக்டர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. விரைவில் பரிபூரண நலம் பெற்று திரும்புவேன்" என்று தெரிவித்திருந்தார். "நான் திரும்ப வந்துட்டேனு சொல்லு' என்று அவர் எழுதுவது போல போட்டோக்களும் அப்போது வெளியாகி இருந்தது.. இந்நிலையில் நித்யானந்தா மீண்டும் ஒரு பதிவு போட்டுள்ளார்.. அவருடைய அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் புதிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் சொல்லி உள்ளதாவது:

பரமசிவன்
"பரமசிவனின் ஆசிகள்! அனைத்து பக்தர்கள் மற்றும் சீடர்களுக்கு ஒரு சிறந்த செய்தி, அனைத்து மருத்துவ அறிக்கைகளும் தெளிவாக உள்ளது. எனக்கு புற்று நோய் அல்லது கட்டி எதுவும் இல்லை, இதய பிரச்சினை எதுவும் இல்லை. கொழுப்பு, கல்லீரல் பிரச்சினை, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் என எந்த பிரச்சினையும் இல்லை. சிறுநீரகங்கள், நுரையீரல், குடல் சரியாக செயல்படுகிறது. கொரோனா உள்பட வைரஸ் தொடர்பான எந்த நோய்களும் இல்லை. அனைத்து உள் உறுப்புகளும் சரியாக வேலை செய்கிறது.

உணவு
எம்.ஆர்.ஐ. ஸ்கேன் உள்பட அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் நடத்தப்படுகின்றன. அலோபதி அமைப்பின் மூலம் அனைத்து நோய் கண்டறிதல்களும் நடத்தப்பட்டுள்ளது.ஒரே விஷயம், என்னால் உணவு உட்கொள்ள முடியவில்லை. நான் எந்த உணவையும் வாயில் தள்ள முயன்றால் சில நிமிடங்களில் வாந்தி எடுக்கும் நிலை உள்ளது. இதே போல எனக்கு உறக்கமும் இல்லை.நிர்வி கல்ப சமாதியில் எனது நித்ய சிவ பூஜையை தவிர உடலில் எந்த இயக்கமும் தன்னிச்சையாக நடக்கவில்லை.

கல்ப சமாதி
என்னை கவனித்து கொண்டிருக்கும் டாக்டர்கள், சீடர்கள் என்னை கீழே படுக்க வைத்து நன்றாக மூச்சு விடும்படி வற்புறுத்துகிறார்கள். 6 மாதங்களுக்கு மேலாக என்னால் உணவு மற்றும் உறக்கம் இல்லாமல் இவ்வாறு நிர்வி கல்ப சமாதியில் இருப்பது எனக்கு வழக்கமானது தான். எனவே சீடர்கள் என் உடல் நிலை பற்றி கவலைப்படத் தேவையில்லை. எனது கிரகங்களும், அனைத்து கிரகங்களும் எனக்கு சாதகமான நிலையில் உள்ளன. எனவே எனக்கு இப்போது மரணமோ, விதேக சமாதியோ இல்லை.

சிறிய விமான நிலையம்
இப்போது கைலாசாவில் சிறிய விமான நிலையம் உள்ளது. ஆனால் பெரிய மருத்துவமனை உள்கட்டமைப்பு இல்லை. என்னை கவனித்து கொள்ளும் மருத்துவர் பக்தர்கள் மற்றும் மருத்துவ கவனிப்பு போன்ற பல இயந்திரங்கள் இருந்தால் அவர்கள் என் உடலை மேம்படுத்தி அதை செய்ய முடியும். எனது மருத்துவ பராமரிப்பிற்காகவோ அல்லது தேவைப்படும் இயந்திரங்களுக்காகவோ எந்த பணத்தையும் அனுப்ப வேண்டாம். என் உடலை கவனித்து கொள்வதற்கு நீங்கள் அனைவரும் ஏற்கனவே போதுமானதைவிட அதிகமாக வழங்கி உள்ளீர்கள்.

யோகேஸ்வரா
எனது பக்தர்கள் மற்றும் சீடர்கள் அனைவருக்கும் நான் சொல்ல விரும்புவது, எனது வாழ்க்கை மற்றும் நான் செய்த வேலைகளை முழுமையாக பூர்த்தி செய்துள்ளேன். எனக்கு இந்த உலகில் வாழ ஆசையும் இல்லை. இந்த உலகத்தை விட்டு வெளியேறும் வெறுப்பும் இல்லை. எனது குருநாதர் அருணகிரி யோகேஸ்வரா என் உடல் முழுவதும் கலந்துள்ளார்.என் உடல் எவ்வளவு காலம் சுறுசுறுப்பாகவும், உயிருடனும் இருக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பவர் அவர்" என்று கூறியுள்ளார்.

என்னாச்சு
கடந்தவாரம், பக்தர்களை கைலாயத்திற்கு வருமாறு நித்தியானந்தா அழைப்பு விடுத்திருந்தார்.. இபபோது உடல்நலம் குறித்து 2 பதிவுகளை வெளியிட்டுள்ளார்.. பொதுவாக, மதம் ரீதியான விவகாரமாக இருந்தல்கூட, அதுதொடர்பாக சர்ச்சைகள் எழுந்தால்கூட, தன் கருத்தை துணிச்சலாக பதிவிடுபவர் நித்தியானந்தா.. ஆனால், இப்போது சுருண்டு படுத்து கொண்ட, சோர்ந்த கண்களுடன் போட்டோக்களை வெளியிட்டு கொண்டிருப்பது, அவரது பக்தர்கள், ஆதரவாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது... அதுமட்டுமல்லாமல், நித்தியை இந்தியாவுக்கு அழைத்து வந்து, உரிய சிகிச்சைகளை தந்து, அவர் சம்பந்தப்பட்ட வழக்குகளை நேர்மையாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகளையும் ஆதரவாளர்கள் எழுப்ப தொடங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications