மியூட் ஆன மைக் நினைவிருக்கா? நாளை நிதி ஆயோக் கூட்டம்.. முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று டெல்லி பயணம்
சென்னை: பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக்' கூட்டம் நாளை 24ம் தேதி டெல்லியில் நடக்கிறது. இதில் பங்கேற்க, முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து விமானத்தில் டெல்லி புறப்பட்டார்.. அங்கு, முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசி, தமிழகத்துக்கான முக்கிய தேவைகள் குறித்தும் எடுத்துரைக்க உள்ளார்.
நாட்டின் வளர்ச்சி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக கொண்டவரப்பட்ட திட்டக்குழுவானது, கடந்த 2015ல் மத்திய திட்டக்குழு மாற்றப்பட்டு, நிதி ஆயோக் அமைப்பாகவும் உருவாக்கப்பட்டது..

தேசிய வளர்ச்சியில் மாநிலங்களின் தீவிர ஈடுபாடு, கூட்டாட்சியை வளர்ப்பது, அரசின் திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளை செயல்படுத்துவதற்கான தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துதல் உள்பட பல்வேறு நோக்கங்களுக்காக இந்த நிதி ஆயோக் அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
முதல்வர்கள் குற்றச்சாட்டு
அப்போதிருந்து, பிரதமர் மோடி தலைமையில் இந்த கூட்டம் வருடா வருடம் நடந்து வருகிறது. கடந்த வருடம் நடந்த கூட்டத்தில், தங்களுக்கு மாநிலங்களுக்கு போதுமான நிதியை ஒதுக்கவில்லை, ஆந்திரா, பீகார் போன்ற மாநிலங்களுக்கே அதிக நிதியை ஒதுக்கியதாக குற்றஞ்சாட்டி, தமிழகம், கர்நாடகா, தெலுங்கானா, இமாச்சல பிரதேசம், கேரளா, பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட மாநில முதல்வர்கள் பங்கேற்கவில்லை..
மம்தா பானர்ஜி மட்டும் பங்கேற்று பேசினார். ஆனால் அவருக்குகூட 5 நிமிடத்துக்கு மேல் பேச வாய்ப்பு தரவில்லை. மைக்கும் அணைக்கப்பட்டு விட்டது. இதனால் கூட்டத்தை விட்டு கோபத்துடன் வெளியேறியிருந்தார் மம்தா.
உடனே முதல்வர் ஸ்டாலின், "இதுதான் கூட்டாட்சி தத்துவமா? முதலமைச்சர் மம்தா பானர்ஜியை இப்படித்தான் நடத்துவதா? எதிர்க்கட்சிகள் நமது ஜனநாநாயகத்தின் ஒரு அங்கம் என்பதை பாஜக அரசு புரிந்துகொள்ள வேண்டும் என்றும் கண்டித்திருந்தார்.
நாளை நடக்கிறது கூட்டம்
இந்நிலையில், நடப்பு நிதியாண்டிற்கான நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் நாளை அதாவது 24ம் தேதி நடைபெற உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது.
இந்நிலையில்., நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.. பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற உள்ளது.. எனவே, இதில் பங்கேற்க ஸ்டாலின் இன்று காலை சென்னையிலிருந்து புறப்பட்டார்.. காலை 9.30 மணி அளவில் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார் முதல்வர் ஸ்டாலின்.
அமைச்சர்கள், நிர்வாகிகள்
மூத்த தலைவர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, ஜெகத்ரட்சகன், ஏ.வ.வேலு உள்ளிட்டோர், டெல்லியில் முதல்வர் ஸ்டாலினை வரவேற்க வேண்டும் என்பதற்காக, முன்கூட்டியே டெல்லி கிளம்பி சென்றுள்ளனர்..
இன்று இரவு டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கும் முதல்வர் ஸ்டாலின், நாளை நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு தேவையான நிதியை தரும்படி பிரதமர் மோடியிடம் நம்முடைய முதலமைச்சர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை மாலை டெல்லியில் இருந்து விமானத்தில் புறப்பட்டு சென்னைக்கு வருகிறார் முதல்வர் ஸ்டாலின்.
பிரதமர் மோடி
பள்ளிக் கல்வித்துறை நிதி முதல் பேரிடர் மேலாண்மை நிதி வரை பலவற்றை மத்திய அரசு நிலுவையில் வைத்திருக்கிறது. இதுதொடர்பாக கடிதம் மூலமாகவும், துறை சார்ந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மூலமாகவும் டெல்லிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டும் வருகிறது. எனினும் இதுவரை கோரிக்கை நிறைவேறாமலேயே உள்ளது.
இப்படிப்பட்ட சூழலில் இன்று இரவு அல்லது நாளை பிரதமர் மோடியை தனியாக சந்தித்து பேச, முதல்வர் ஸ்டாலின் தரப்பில் நேரம் கேட்கப்பட்டுள்ளது; அனுமதி கிடைத்தால், பிரதமரை சந்தித்து பேசுவார் என திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.. அந்த வகையில், முதல்வரின் இந்த டெல்லி பயணம் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications