நிவர் புயல் கரையை கடந்த பின்னரும் சூறாவளி வீசும்... கனமழை பெய்யும் - வானிலை மையம்
நிவர் புயல் கரையை கடந்த பின்னரும் பல மாவட்டங்களில் சூறாவளி காற்று வீசும், உள் மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தின் பல மாவட்டங்களை சூறையாடி விட்டது நிவர் புயல். வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த புயல் கரையை கடந்த பின்னரும் பல பகுதிகளில் சூறாவளி காற்று வீசும், உள் மாவட்டங்களான திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பதூரில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.
புயல் கரையை கடந்த பின்னர் நடக்க இருக்கும் நிகழ்வுகள், மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

தீவிர புயல் கரையை கடந்த பின்னர் அடுத்த 6 மணி நேரத்தில் வலுவிழந்து புயலாகவும் அதற்கு அடுத்த 6 மணி நேரத்ல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.
இதன் காரணமாக 26ஆம் தேதியன்று உள் மாவட்டங்களான திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூரில் பலத்த மழை பெய்யக்கூடும். 20 செமீ அளவிற்கு மழை பதிவாகும். ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்.
சூறாவளிக் காற்று மணிக்கு 75 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இடை இடையே 85 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் வீடுகளின் மேற்கூரைகள் பாதிப்பிற்கு ஆளாகும். மரங்கள் வேரோடு சாயும். மின் இணைப்புகள், தொலை தொடர்புகள் துண்டிக்கப்படலாம். வாழை, பப்பாளி மரங்கள் சாயும்.
பொதுமக்கள் வீட்டில் பத்திரமாக இருக்கவேண்டும். பேரிடர் மேலாண்மைத்துறையினருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications