சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நிவர் கடந்து போன சுவடின் ஈரம் கூட காயலையே... வங்க கடலில் அடுத்த தாழ்வு பகுதி- தமிழகத்திற்கு வார்னிங்

Google Oneindia Tamil News

சென்னை: நிவர் புயலை தொடர்ந்து வங்கக்கடலில் உருவாகும் அடுத்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

நிவர் புயல் இன்று அதிகாலை 2.30 மணிக்கு தமிழகத்தில் கரையை கடந்தது. அதிதீவிர புயலாக உருவெடுத்த நிவர் புதுச்சேரி - மரக்காணம் பகுதிக்கு இடையில் கரையை கடந்தது.

வங்கக் கடலில் இரு காற்றழுத்தங்கள்.. எங்கே செல்கின்றன?.. சாட்டிலைட் வீடியோவை பாருங்கள்வங்கக் கடலில் இரு காற்றழுத்தங்கள்.. எங்கே செல்கின்றன?.. சாட்டிலைட் வீடியோவை பாருங்கள்

இந்த புயல் கரையை கடக்கும் போது வடமாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. 143 கிமீ வேகத்தில் காற்று வீசியது.

உருவாகும் காற்றழுத்தம்.. இன்னும் 3 நாளில் அடுத்த புயல்.. பெயர் என்ன தெரியுமா?உருவாகும் காற்றழுத்தம்.. இன்னும் 3 நாளில் அடுத்த புயல்.. பெயர் என்ன தெரியுமா?

எப்படி

எப்படி

இந்த நிலையில் நிவர் புயலை தொடர்ந்து வங்கக்கடலில் உருவாகும் அடுத்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக உருவெடுக்க வாய்ப்பு உள்ளது என்றும், நவம்பர் 29ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

எங்கு

எங்கு

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு வங்கக்கடலில் உருவாகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. பொதுவாக தெற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானால் தமிழகத்தில் மழை பெய்யும் என்பதால் தமிழகத்தில் மழை பெய்யலாம்.

 எப்படி

எப்படி

நிவர் புயல் இன்று அதிகாலை 2.30 மணிக்குதான் கரையை கடந்தது. புயலை கரையை கடந்த கொஞ்ச நேரம் கூட ஆகவில்லை. அதற்குள் அடுத்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மழை

மழை

இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக உருவெடுக்குமா அல்லது மழை மட்டும் கொடுக்குமா என்று விவரம் தெரியவில்லை. நாளை இதற்கான விவரங்கள் வெளியாகலாம். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து பின் நிவர் புயலும் வந்தது. தற்போது புதிதாக அடுத்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதால் மழையின் தீவிரம் இன்னும் அதிகரிக்கலாம் என்று கருதப்படுகிறது

English summary
Nivar Storm: New pressure drop is going to form near Tamilnadu in Bay of Bengal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X