நஹி.. தமிழகம் உள்பட 5 தென்மாநிலங்களில் இனி புதிய மருத்துவ கல்லூரி திறக்க முடியாது! ஷாக் தகவல்
சென்னை: இளங்கலை மருத்துவ படிப்புக்கான தேசிய மருத்துவ ஆணையம் வகுத்துள்ள வழிகாட்டுதல்கள் அடுத்த கல்வியாண்டு முதல் அமலுக்கு வந்தால் தமிழ்நாடு உள்பட 5 தென்மாநிலங்களில் புதிதாக மருத்துவ கல்லூரிகள் திறக்கவோ அல்லது ஏற்கனவே இருக்கும் மருத்துவ கல்லூரிகளில் எம்பிபிஎஸ் இடங்களை அதிகரிக்கவோ முடியாது என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் மருத்துவ கல்லூரி சேர்க்கை, மருத்துவ கல்லூரி இடங்கள் குறித்த விஷயங்களில் முக்கிய முடிவுகளுக்கான விதிகளை தேசிய மருத்துவ ஆணையம் (National Medical Commission) மேற்கொண்டு வருகிறது. இந்த ஆணையத்தின் புதிய வழிகாட்டு விதிமுறைகள் கடந்த ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி மத்திய அரசு அரசிதழிலில் வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பு தான் தற்போது தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது இந்த வழிகாட்டுதல்கள் அடுத்த கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வரலாம் என கூறப்படுகிறது. இந்த வழிக்காட்டு நெறிமுறைகள் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் தமிழ்நாடு உள்பட 5 தென்மாநிலங்களிலும் புதிதாக மருத்துவ கல்லூரிகள் திறக்க முடியாது எனவும், ஏற்கனவே இருக்கும் மருத்துவமனைகளில் எம்பிபிஎஸ் படிப்புக்கான சீட்டை அதிகரிக்க முடியாது என்றும் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது தற்போது தேசிய மருத்துவ ஆணையம் வகுத்துள்ள வழிக்காட்டு நெறிமுறையில் ஒவ்வொரு மருத்துவ கல்லூரியிலும் எம்பிபிஎஸ் படிப்புக்கான இடங்கள் என்பது 50, 100, 150 என்ற எண்ணிக்கையில் மட்டுமே இடம் பெற வேண்டும். மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் 10 லட்சம் பேருக்கு 100 எம்பிபிஎஸ் இடங்கள் என்ற அடிப்படையில் இடங்கள் வழங்க வேண்டும்'' என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி பார்த்தால் தற்போது தமிழ்நாடு உள்பட 5 தென்மாநிலங்களிலும் அங்குள்ள மக்கள்தொகையை காட்டிலும் அதிகளவில் எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. 2021ம் ஆண்டு நாடாளுமன்றம் வழங்கிய தகவலின்படி பார்த்தால் தமிழ்நாட்டில் மொத்தம் 7.64 கோடி மக்கள் உள்ள நிலையில் மொத்தம் 11,600 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன.
கர்நாடகாவில் 6.68 கோடி மக்கள் இருக்கும் நிலையில் 11,695 எம்பிபிஎஸ் இடங்களும், ஆந்திராவில் 5.27 கோடி மக்கள் இருக்கும் நிலையில் 6,435 எம்பிபிஎஸ் இடங்களும், கேரளாவில் 3.54 கோடி மக்கள் உள்ள நிலையில் 4,665 எம்பிபிஎஸ் இடங்களும் உள்ளன. தெலங்கானாவில் 3.77 கோடி மக்கள் இருக்கும் நிலையில் 8,540 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன.
ஆனால் தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய வழிக்காட்டுதல் நெறிமுறைப்படி பார்த்தால் தமிழ்நாட்டில் 7,600 எம்பிபிஎஸ் சீட்டும், கர்நாடகாவில் 6,700 எம்பிபிஎஸ் சீட்டும், ஆந்திராவில் 5,300 எம்பிபிஎஸ் சீட்டும், கேரளாவில் 3,500 எம்பிபிஎஸ் சீட்டும், தெலங்கானாவில் 3,700 எம்பிபிஎஸ் சீட்டும் தான் இருக்க வேண்டும். ஆனால் 5 மாநிலங்களில் தற்போது அதிகளவில் எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன.
இதுமட்டுமின்றி இந்தியாவில் 854 பேருக்கு ஒரு டாக்டர் என்ற விகிதம் இருக்கும் நிலையில் தென்மாநிலங்களை எடுத்து கொண்டால் 1000 பேருக்கு 1 டாக்டர் என்ற நிலை உள்ளது. இதனால் தான் வடமாநிலங்களை ஒப்பிடும்போது தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள் சுகாதாரத்துறையில் சிறந்து விளங்குகின்றன.
இதனால் தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய வழிக்காட்டுதல் நெறிமுறைகள் அடுத்த கல்வியாண்டில் நடைமுறைக்கு வந்தால் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட 5 மாநிலங்களிலும் புதிய மருத்துவ கல்லூரிகள் திறக்க முடியாது. அதேபோல் ஏற்கனவே இருக்கும் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் இடங்களையும் அதிகரிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு தமிழகம் உள்பட தென்மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
-
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம்












Click it and Unblock the Notifications