வீழும் ஐடி துறை? கல்லூரி மாணவர்களுக்கு ஷாக்.. இந்த வருடம் கேம்பஸ் கிடையாது.. இன்போசிஸ் அறிவிப்பு
சென்னை: கல்லூரி மாணவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக இன்ஃபோசிஸ் இந்த வருடம் கேம்பஸ் இன்டர்வியூ செல்லாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. புதியவர்களை வேலைக்கு அமர்த்த இன்ஃபோசிஸ் இந்த ஆண்டு கல்லூரி வளாகங்களுக்குச் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட உலக ஐடி சந்தைகளில் ஏற்பட்ட சரிவு காரணமாக இன்ஃபோசிஸ் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. செய்தியாளர் சந்திப்பில், அதன் CEO மற்றும் MD சலீல் பரேக், நிறுவனம் தனது நிறுவனத்தில் தற்போது போதிய திறமை உள்ளது. அதே சமயம் பணிகளை 85 சதவிகித பணியாளர்கள் வைத்துகொண்டு செய்ய முடியும் சூழல் உள்ளது. இப்போது உள்ள சூழலில் இந்த ஆண்டு பணியமர்த்துவதற்காக நாங்கள் கல்லூரி வளாகங்களுக்குச் செல்வது சாத்தியமில்லை. ஆனால் ஒவ்வொரு காலாண்டிலும் நிலைமையைக் கண்காணிக்க வேண்டும்

வேலை இழப்பு: ஒவ்வொரு காலாண்டிலும் நிலைமை மாறும் வாய்ப்புகள் உள்ளன, என்று அவர் கூறியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் உள்ள 1.5 மில்லியன் பொறியியல் பட்டதாரிகளில் 20-25 சதவீதத்தை ஐடி சேவைகள் துறை நேரடியாக பணிக்கு அமர்த்துகிறது. ஆனால் நிறுவனங்கள் இப்போது அமெரிக்காவில் நீடித்த மந்தநிலை, இந்தியாவின் பொருளாதார நிலை காரணமாக புதிதாக ஆட்களை பணிக்கு அமர்த்துவதை நிறுத்த முடிவு செய்துள்ளது.
உதாரணமாக தொழிலாளர் எண்ணிக்கையில் 6333 பேரை வேலையில் இருந்து நீக்க உள்ளத்தாக்கில் டிசிஎஸ் சமீபத்தில் தெரிவித்தது. தொழிலாளர் எண்ணிக்கையில் 7250 பேரை வேலையில் இருந்து நீக்க உள்ளத்தாக்கில் இன்போசிஸ் சமீபத்தில் தெரிவித்துள்ளது. எச்சிஎல் நிறுவனம் 2299 பேரை பணியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளதாம்.
மைக்ரோசாப்ட், அசேஞ்சர் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் இந்த வருடம் வருமான உயர்வு கிடையாது என்று அறிவித்த நிலையில்தான் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஐடி துறையில் இதனால் அதிர்ச்சி அளிக்கும் மந்த நிலை தொடங்கிவிட்டதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
வளர்ச்சி மற்றும் வீழ்ச்சி: பல உலக நாடுகள் பொருளாதார ரீதியாக வீழ்ச்சியை கண்டு வருகின்றன. சீனாவின் பொருளாதாரம் கூட வீழ்ச்சியை நோக்கி சென்று இருக்கிறது என்று உலக நாட்டு பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றன. 2023ல் இந்தியா வேகமாக வளரும் நாடாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக ஜி 20 நாடுகள், பிரிக்ஸ் நாடுகளில் இருப்பதிலேயே இந்தியாவின் வளர்ச்சிதான் அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இன்னொரு பக்கம் இந்தியாவின் இந்த ஜிடிபி வளர்ச்சி திடீரென மட்டுப்பட்டு வேகம் குறையும் அல்லது வளர்ச்சி குறையும் வாய்ப்புகள் உள்ளன என்றும் சில பொருளாதார வல்லுனர்கள் எச்சரிக்கை விடுகின்றன. ஏற்கனவே 023 உலகில் மிகப்பெரிய அளவில் பொருளாதார மந்த நிலை ஏற்படும் என்று பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சி மையம் - Centre for Economics and Business Research (CEBR) தெரிவித்து உள்ளது. சர்வதேச அளவில், பல்வேறு உலக நாடுகளில் இவர்கள் நடத்திய ஆராய்ச்சியின் முடிவில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலகம் முழுக்க விலைவாசி உயர்ந்து வருகிறது. பணவீக்கம் அதிகரித்து வருகிறது. உலகம் முழுக்க அனைத்து நாடுகளின் மொத்த பொருளாதாரம் 100 ட்ரில்லியனை 2022ல் கடந்து உள்ளோம்.
இது நல்ல விஷயம். ஆனால் 2023ல் இந்த நிலைமை இருக்காது. 100 டிரில்லியன் உலக பொருளாதாரம் 2023ல் குறையும். பொருளாதார வீழ்த்தி, விலையேற்றம் காரணமாக இந்த நிலைமை ஏற்படும். உலக நாடுகள் அதிக அளவில் கடன் வாங்குவதும், பண வீக்கமும் இதற்கு காரணமாக இருக்கும். உலக நாடுகள் தங்கள் நாட்டின் பணவீக்கத்தை கட்டுப்படுத்த அதிக அளவில் கடன் வாங்கி உள்ளது. இந்த கடனுக்கான வட்டியும் உயர்ந்து கொண்டே வருகிறது. இது உலக அளவில் பொருளாதார மந்தநிலையை வரும் நாட்களில் ஏற்படுத்தலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications