தனி மாவட்டமாக அறிவிக்கப்படுமா ஓசூர்? சட்டசபையில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் சொன்ன பதில்
சென்னை: ஓசூரை தனி மாவட்டமாக அறிவிக்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் சட்டசபையில் பதில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரின் இரண்டாவது நாள் இன்று கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர், ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கியது. கொரோனா காரணமாக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இரண்டு நாட்கள் மட்டுமே நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு நேற்று ஆளுநர் உரைக்குப் பின் தெரிவித்தார். சப்பபேரவை கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான இன்று, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டுவரப்பட்டு அதற்கான விவாதம் நடைபெறுகிறது.
இன்றைய கூட்டத்தொடரில், மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 12 பேருக்கு பேரவையில் இரங்கற்குறிப்பு வாசிக்கப்பட்டது. அதன்பிறகு கேள்வி பதில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அதை முதன்முறையாக தமிழ்நாடு சட்டப்பேரவை கேள்வி பதில் நேரலை செய்யப்படுகிறது.

ஓசூர் மாவாட்டம்
சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி உள்ளிட்ட வட்டாரங்களை ஒருங்கிணைத்து ஒசூரை புதிய மாவட்டமாக அறிவிக்கப்படுமா என்று தளி சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன் சட்டசபையில் கேள்வி எழுப்பினார். அதற்கு, வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் பதிலளித்தார். அதில், ''அரசின் வழிகாட்டு முறைப்படி ஓசூரை புதிய மாவட்டமாகப் பிரிப்பதில் வாய்ப்பில்லை. சட்டசபை உறுப்பினரின் கோரிக்கையை முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் செல்கிறேன்'' என்று சட்டசபையில் தெரிவித்தார் அமைச்சர்.

ஓசூரில் ஏர்போர்ட்
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் முக்கிய பகுதியாக இருக்கிறது ஓசூர். இங்குதான் பல முக்கியமான தொழிற்சாலைகள் இருக்கிறது. கர்நாடக - தமிழக எல்லையாக இருப்பதால், வளர்ச்சியடைந்த நகரமாக இருக்கிறது. தற்போதும் மாநகராட்சியாக தரமும் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில், ஓசூருக்கு சர்வதேச விமான நிலையம் அமையவிருக்கிறது. அதற்கான வேலையும் துவங்கியிருக்கிறது.

மத்திய அரசு அனுமதி
ஒசூரில் விமான நிலையம் அமைக்க மத்திய அரசு அனுமதி கொடுத்திருக்கும் நிலையில், நிலையில் டெண்டர் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் தொழில் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குனர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துவந்த நிலையில் அதற்கான பணிகளை தொடங்கியது அரசு. ஓசூரில் விமான நிலையம் அமைக்க சாத்தியமான இடங்களை ஆலோசகர்கள் தேர்வு செய்து வழங்கலாம். விமான போக்குவரத்திற்கு உகந்த இடம், விமான நிலையம் அமைக்க அனைத்து வசதிகளும் கொண்ட இடங்களை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வம்
ஓசூர் தனி மாவட்டமாக உருவாகுமா என்ற மக்களின் நீண்ட நாள் கேள்விக்கு, 'தற்போதைக்கு இல்லை' என்ற அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அமைச்சரிடம் இருந்து கிடைத்திருக்கிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications