ஒரு பைசா கூட உயராத பெட்ரோல் டீசல் விலை... இன்னும் எவ்வளவு நாள் இப்படியே இருக்கும்!
சென்னை: ஐந்து மாநில தேர்தல் காரணமாக இந்தியாவில் கடந்த 17 நாட்களாக பெட்ரோல் டீசல் விலை ஒரு பைசா கூட உயர்த்தப்படவில்லை.
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 93.11 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல ஒரு லிட்டர் டீசல் 86.45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தலைநகர் டெல்லியில் பெட்ரோல் ஒரு லிட்டர் 91.17 ரூபாய்க்கும் டீசல் 81.47 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல மும்பையில் பெட்ரோல் 97.57 ரூபாய்க்கும், டீசல் 88.60 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.. அடுத்த வாரம் வாக்குப்பதிவு நடைபெறும் மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் பெட்ரோல் மற்றும் டீசல் லிட்டருக்கு 91.35 ரூபாய் மற்றும் 84.35 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
சர்வதேச அளவில் இன்று கச்சா எண்ணெய் ஒரு பேரல் டாலருக்கு வர்த்தகம் ஆகிறது. ஒபெக் நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைத்துள்ளதால் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சில மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ. 100ஐ தாண்டியது.
இருப்பினும், சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து கடந்த 17 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. இருந்தாலும் தற்போது பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படும் விலையே அதிகம் என்பதால் அதைக் குறைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன. ஆனால், மத்திய, மாநில அரசு கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்ட நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி, வரியைக் குறைக்க முன்வரவில்லை.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications